சென்னை திருவொற்றியூர் பகுதியை சேர்ந்தவர் சையது. (பெயர் மாற்றப்பட்டுள்ளது) 45 வயதான சையது அப்பகுதியில் ஆட்டோ டிரைவராக உள்ளார். இவரது மனைவி பாத்திமா. (பெயர் மாற்றப்பட்டுள்ளது) 38 வயதான பாத்திமாவுக்கும் சையதுக்கும் 17 வயதில் இரண்டு பெண்கள் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் பாத்திமாவுக்கு சில மாதங்களுக்கு முன்பு பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த 23 வயதான ஆட்டோ டிரைவர் முகமது ரபிக்குடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. அடிக்கடி போனில் பேசி வந்துள்ளனர். அதேபோல் 23 வயதான தனியார் வங்கி ஊழியர் அப்துல் கலாம் என்பவருடனும் தொடர்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் முகமது ரபிக்கும், அப்துல் கலாமும், பாத்திமாவின் இரண்டு பெண்களையும் காதலிப்பதாக கூறி உள்ளனர். ஆனால் இவர்களின் காதலுக்கு சையது எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பெண் குழந்தைகள் முதலில் படிக்கட்டும். அதன் பின் காதல், திருமணம் குறித்தெல்லாம் பேசிக் கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார். ஆனால் கணவரின் பேச்சை பாத்திமா கேட்கவில்லை. ரகசியமாக முகமது ரபீக்குடனும் அப்துல் கலாமுடனும் பேசி வந்துள்ளார். தனது மகள்களுக்கும் அவர்கள் இருவரையும் அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
இதையும் படிங்க: 100 பெண்களுடன் 'டேட்டிங்'..! ரூ.3 கோடி சுருட்டிய 'காதல் மன்னன்' கைது..!


இவர்கள் இருவரும் உங்களை காதலிப்பதாக தெரிவித்துள்ளனர். விரைவில் திருமணனும் செய்து கொள்வார்கள் எனக்கூறி பெண்களை மூளைச்சலவை செய்துள்ளார். அம்மாவின் பேச்சை தட்டாத சிறுமிகளும் ஆட்டோ டிரைவராக முகமது ரபிக்கையும், வங்கி ஊழியரான அப்துல் கலாமையும் காதலிக்க சம்மதம் தெரிவித்துள்ளனர். இதன்பிறகு தான் அவர்களின் சுயரூபம் தெரியவந்துள்ளது. இரவில் சையதிற்கு பாலில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்த பாத்திமா, இரண்டு வாலிபர்களையும் வரச்சொல்லி, தான் பெற்ற குழந்தைகளுக்கே பாலியல் தொல்லை அளிக்க சொல்லியிருக்கிறார். ஆரம்பத்தில் சிறுமிகளுக்கு பாலில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து பாலியல் தொல்லை அளிக்கப்பட்டுள்ளது.

இதற்காக, அந்த இரண்டு இளைஞர்களிடமும் பாத்திமா பணம் பெற்றதாக கூறப்படுகிறது. காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் கூறிவிட்டு, இரவில் இவ்வாறு நடந்து கொள்வது அந்த சிறுமிகளுக்கு தவறாக தெரிந்துள்ளது. மேலும் தங்களிடம் இதுபோல் நடந்துகொள்ளும் இளைஞர்களிடம் அம்மா பணம் பெறுவதும் சிறுமிகளுக்கு உறுத்தி உள்ளது. இதுகுறித்து ஒருநாள் 2 சிறுமிகளும் தங்களது அப்பா சையதிடம் கூறி உள்ளனர். ஆத்திரமடைந்த சையத், பாத்திமாவை கண்டித்துள்ளார்.
மேலும் இளைஞர்கள் குறித்தும், தாய் பாத்திமா குறித்தும் திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் சிறுமிகளின் தாய் மற்றும் முகமது ரபிக், அப்துல் கலாம் ஆகிய மூவரையும் நேற்று கைது செய்தனர். விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: அண்ணா பல்கலை. பாலியல் வழக்கு.. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த போலீசார்...!