அண்டை மாநிலமான கேரளாவின் முதலமைச்சர், கவர்னர் மற்றும் தலைமைச் செயலாளர் உள்ளடக்கிய “டீம் கேரளம்” என்று அழைக்கப்படும் ஒரு புரட்சிகரமான ஒற்றுமையுடன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்து, மாநிலத்தின் நிதி மற்றும் வளர்ச்சிக்கான உரிமைகளை கேட்டுள்ளனர்.

டெல்லியில் உள்ள ஜந்தர் மந்திர் பகுதியில் அமைந்துள்ள கேரள இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில், முதலமைச்சர் பினராயி விஜயன், ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் மற்றும் கேரளத்தின் சிறப்பு பிரதிநிதி கே.வி. தாமஸ் ஆகியோர் இணைந்து, மத்திய அரசுடனான பேச்சுவார்த்தைகளில் ஒருங்கிணைந்து தங்களது நிலைப்பாட்டை வெளிப்படுத்தினர்.
இதையும் படிங்க: டயட்டால் பறிப்போன உயிர்..! யூடியூப்-ஆல் நேர்ந்த விபரீதம்..!
மார்ச் 11ம் தேதி அன்று ஆளுநரால் நடத்தப்பட்ட ஒரு முக்கிய சந்திப்பு, கேரளத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களை ஒரு பொதுவான இலக்கை நோக்கி அணிதிரட்டியது. இந்த முக்கியமான உரையாடலுக்கு அடித்தளமிட்டது.
கேரளத்தின் கடுமையான நிதி நெருக்கடி இதற்கு காரணமாகும். பணப்புழக்க பற்றாக்குறை, செலுத்தப்படாத சம்பளங்கள் மற்றும் ஜூலை 2024 வயநாடு நிலச்சரிவு பேரழிவுக்குப் பின் தேவைப்படும் நிவாரணம். ஆகியவை முக்கிய பிரச்சனைகளாக கேரளாவில் உருவெடுத்துள்ளன.

இடதுசாரி ஜனநாயக முன்னணி (LDF) ஆளும் மாநிலமும், பாஜக தலைமையிலான மத்திய அரசும், வயநாட்டிற்காக வழங்கப்பட்ட 529.50 கோடி ரூபாய் கடன், இதை மானியமாக மாற்றி கால அவகாசம் நீட்டிக்க வேண்டும் என்று கேரளம் கோருவது மற்றும் தாமதமாகும் மத்திய அரசின் நிதி உதவிகள் குறித்து தொடர்ந்து மோதல் போக்கை கடைபிடித்து வந்துள்ளனர்.
செவ்வாய்க்கிழமை, திருவனந்தபுரத்தில் நடந்த முதல்வருடனான ஆலோசனையில் ஆளுநர் ஆர்லேகர் கேரளத்தின் குரலை மத்திய அரசிடம் ஒலிக்கச் செய்வதாக உறுதியளித்தார். பினராய் விஜயனின் தலைமையுடன் இணைந்து, அரசியல் கட்சி எல்லைகளைத் தாண்டிய ஆதரவை தருவதாக ஆளுநர் கருத்து தெரிவித்தார். காங்கிரஸ், சிபிஐ(எம்), ஐயுஎம்எல் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், அர்லேகரின் “நாடு முதலில்” என்ற அழைப்பை ஏற்று, கேரளத்தின் நலன்களை முன்னிறுத்தினர்.
புதன்கிழமை நிர்மலா சீதாராமனுடனான சந்திப்பு, கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் கொடுத்த காலை சிற்றுண்டி உடன் சுமுகமாக நடைபெற்றது. கடந்த ஆண்டு முழுவதும் மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைபிடித்து வந்தாலும், எந்த பலனும் இல்லாததால் அமைதியான பேச்சுவார்த்தைக்கு மாநில கேரள அரசு தயாராகி தற்போது செயல்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளதாக தெரிகிறது.

ஆளுநர் அர்லேகர் மற்றும் அமைச்சர் தாமஸ் உடனிருக்க, டீம் கேரளம் நிதி பற்றாக்குறை குறித்தும் , விழிஞ்சம் துறைமுக நிதி மற்றும் ஆஷா தொழிலாளர்களின் நிவாரணம் ஆகியவற்றை வலியுறுத்தியுள்ளனர். கேரள ஆளுநரின் இந்த ஆதரவை “புதிய தொடக்கம்” என பாராட்டிய முதலமைச்சர் பினராய் விஜயன், இது கேரளாவிற்கு பெரிதும் கை கொடுக்கும் என நம்புவதாகவும் தெரிவித்தார்.
முந்தைய ஆளுநர் ஆரிப் முகமது உடன் தினம்தோறும் ஒரு பிரச்சனை, சண்டையென கேரள அரசு காலத்தை தள்ளி கொண்டு இருந்த நிலையில், புதிய ஆளுநருடன் கைகோர்த்து மாநிலத்தின் உரிமைக்காக போராட களத்தில் உதித்திருப்பது புதிய ஒரு உருப்படியான முயற்சியாகவே பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: கர்நாடகம், கேரளம் செய்வதை உங்களால் செய்ய முடியாதா..? முதல்வர் ஸ்டாலினை குடையும் அன்புமணி ராமதாஸ்.!