பத்தனம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்த அந்த தடகளட விளையாட்டு மாணவி தலித் சமூகத்தை சேர்ந்தவர். சிறுமியாக இருந்த போது தொடங்கி, கடந்த ஐந்து ஆண்டுகளாக 50க்கும் மேற்பட்ட காமக் கொடூரர்கள் அவரை சீரழித்து இருக்கிறார்கள்.
கடந்த 10-ம் தேதி அன்று இந்த குற்றம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து முதல் தகவல் அறிக்கையை தாக்கல் செய்தனர். சிறப்பு புலனாய்வு குழுவினர் இந்த வழக்கில் விசாரணை நடத்தி, குற்றம் சாட்டப்பட்ட 59 பேர்களில் இதுவரை 57 பேர்களை கைது செய்து இருக்கிறார்கள். கைதானவர்களில் ஐந்து சிறுவர்களும் அடங்குவார்கள்.

நண்பர்களுடன் கூட்டு பலாத்காரம், அந்த வீராங்கனைக்கு 13 வயதாக இருந்தபோது குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான சுபின் என்பவர் தனது மொபைல் போன் மூலம் அவருக்கு ஆபாசமான செய்திகளையும் படங்களையும் அனுப்பி வைத்திருக்கிறார்.
இதையும் படிங்க: முல்லைப் பெரியாறு அணை வழக்கு: கேரளாவின் கோரிக்கை நிராகரிப்பு; "பாதுகாப்பாக உள்ளது; "ஆய்வு செய்ய தேவையில்லை";உச்சநீதிமன்றம் அதிரடி
16 வயதில் அவருடைய வீட்டுக்கு அருகே உள்ள அச்சங்கோட்டு மலிக்கு சுபின் அந்தப் பெண்ணை பைக்கில் அழைத்துச் சென்று ரப்பர் தோட்டத்தில் பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். இந்த நிகழ்வுகள் அனைத்தையும் அவர் போனில் பதிவு செய்து கொண்டார்.

பின்னர் அவர் தனது நண்பர்களான மற்றும் சில குற்றவாளிகளிடம் அதை காட்டி அதன் பின் அவர்கள் குழுவாக அச்சங்கோட்டு மலிக்கு மாணவியை அழைத்துச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று வி எஸ் அருண் (வயது 25 )என்பவர் கைது செய்யப்பட்டார். ஐந்தாவது குற்றவாளியான எஸ்.சுதி கடந்த ஆண்டில் பத்தனம்திட்டா போலீசாரால் பதிவு செய்யப்பட்ட போஸ்கோ வழக்கில் கைதாகி ஏற்கனவே சிறையில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

மாணவியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் நான்கு போலீஸ் நிலையங்களில் இந்த சம்பவம் தொடர்பாக மொத்தம் 30 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன. குற்றம் சாட்டப்பட்ட 59 பேர்களில் இரண்டு பேர் தவிர மற்ற 57 பேர்களையும் போலீசார் கைது செய்து விட்டனர். மற்றவர்களை தொடர்ந்து தேடி வருகிறார்கள். இவர்களுடன் இணைந்து வேறு சிலரும் இந்த பலாத்காரத்தில் சம்பந்தப்பட்டிருக்கிறார்களா என்று விசாரணை நடந்து வருகிறது.
இதையும் படிங்க: கேரள சாமியார் 'ஜீவசமாதி'யில் சந்தேகம் உடலை தோண்டி எடுத்து, போலீசார் விசாரணை