நீலகிரி மாவட்டத்தில் ஏப்ரல் 5 மற்றும் 6-ம் தேதிகளை முதலமைச்சர் மு க ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அங்கு புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை திறந்து வைக்கும் முதலமைச்சர், பல நலத்திட்ட பணிகளையும் தொடங்கி வைக்க உள்ளார்.

தொடர்ந்து நீலகிரி சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு ஆறாம் தேதி மாலை கோவை செல்ல உள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின். கோவையில் பத்தாயிரம் பெண்கள் பங்கேற்கும் வள்ளி கும்மி நடனத்தை அவர் நேரில் பார்வையிட உள்ளார். கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சியில் சாதனை படைத்த பெண்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்ட உள்ளார்.
இதையும் படிங்க: ரூ.120 கோடியில் தூர்வாரும் பணிகள்.. தமிழக மக்களுக்கு குட் நியூஸ் சொன்ன அமைச்சர் துரைமுருகன்..!

இந்த நிகழ்ச்சி தொடர்பாக கொங்குநாடு மக்கள் தேசிய பற்றிய மாநில துணை பொதுச்செயலாளர் நித்தியானந்தம் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் கடந்த வருடம் ஈரோடு மாவட்டத்தில் பெருந்துறையில் 16 ஆயிரம் பெண்கள் பங்கேற்று வள்ளி கும்மி நடன நிகழ்ச்சி நடத்தப்பட்டதாகவும் இது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்ததாகவும் தெரிவித்தார்.

இந்தியாவில் அசாம் மாநிலத்தில் அதிகபட்சமாக 11 ஆயிரம் பெண்கள் ஒரே நேரத்தில் நடனம் ஆடியது தான் சாதனையாக இருந்தது என்றும் அதனை முறியடித்து பெருந்துறையில் 16 ஆயிரம் பெண்கள் பங்கேற்று சாதனை படைத்ததாகவும் தெரிவித்துள்ளார். இந்த ஆட்டத்தில் பங்கேற்ற 16 ஆயிரம் பேருக்கு கோவை கொடிசியா மைதானத்தில் வரும் ஆறாம் தேதி மாலை 5 மணிக்கு பாராட்டு விழா நடைபெற உள்ளதாகவும், இந்த நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துகொள்ள உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

நிகழ்ச்சியின் போது சாதனை படைத்த பெண்களுக்கு சான்றிதழ் வழங்கி முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்ட உள்ளதாகவும் தொடர்ந்து பத்தாயிரம் பெண்கள் கலந்து கொள்ளும் வள்ளி கும்மி நடன நிகழ்ச்சியை முதலமைச்சர் பார்வையிட உள்ளதாகவும் தெரிவித்தார். இந்த வள்ளி கும்மி ஆடுவதால் உடல் வலிமையும் மனவலிமையும் பெண்களுக்கு அதிகமாகும் என்றும் பாரம்பரிய கலையை ஏராளமான கிராமத்து பெண்கள் கற்றுக்கொண்டு வருவதாகவும் கூறினார். வள்ளி கும்மி கலையை ஊக்கப்படுத்த கொங்குநாடு கலைக்குழு தொடங்கப்பட்டுள்ளதாகவும், இந்த பாராட்டு விழாவில் அமைச்சர் செந்தில்பாலாஜி, கொங்குநாடு மக்கள் தேசியகட்சி பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ இப்படம் ஏராளமான கலந்து கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஆளுநர் - மாநில அரசு மோதலுக்கு முடிவு எப்போது? துணைவேந்தர்கள் நியமனம் குறித்து ராமதாஸ் கேள்வி..!