மது மற்றும் கஞ்சா போன்ற போதை பழக்கத்திற்கு அடிமையாகும் சிறுவர்கள் தொடர் திருட்டு மற்றும் வழிபறியில் ஈடுபடுவது அதிகரித்துள்ளது. எதிர்காலம் பற்றிய சிந்தனை இல்லாமல் சிறுவர்கள் திருட்டில் ஈடுபடுகின்றனர். பல இடங்களில் கஞ்சா போதையில் சிறார்கள் தகராறில் ஈடுபடுவதும், கொலை, கொள்ளை போன்ற சம்பவங்களில் ஈடுபடுவதையும் காணமுடிகிறது. இதே போன்று கிருஷ்ணகிரி அருகே 3 சிறுவர்கள் முதியவரை தாக்கி செல்போனை பறித்தும் செல்லும் காட்சிகள் வைரலாகி வருகின்றன.

காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் டேவிட் ராஜான். வயது 50. கிருஷ்ணகிரி அருகே உள்ள பூந்தோட்டம் பகுதியில் வசிக்கும் தனது நண்பரை சந்திப்பதற்காக வந்துள்ளார். பின்னர் நள்ளிரவு 2 மணியளவில் பூந்தோட்டத்தில் இருந்து பேருந்து நிலையம் செல்வதற்காக பெங்களூரு சாலை வழியாக செல்போனில் பேசியபடி டேவிட் ராஜன் நடந்து சென்றுள்ளார். அப்போது எங்கிருந்தோ டேவிட் ராஜன் மீது ஒரு கல் வந்து விழுந்துள்ளது. வலியில் துடித்த் டேவிட் ராஜன் கல் வந்த திசையில் நோக்கினார். ஆனால் இருட்டில் எதுவும் தெரியாததால் அங்கேயே நின்றிருந்தார். தீடீரென அவர் மீது அடுத்தடுத்து கல் வந்து விழ டேவிட் ராஜன் பலத்த காயமடைந்தார்.
இதையும் படிங்க: கிருஷ்ணகிரியில் மூன்று பள்ளி 'சார்'கள் சிறுமிக்கு செய்த அட்டூழியம்... ஸ்டாலின் அரசுக்கு எதிராக எடப்பாடி பழனிச்சாமி அதிரடி அறிவிப்பு.!

எதிர்பாராத இந்த திடீர் தாக்குதலால் நிலைகுலைந்து டேவிட் ராஜன் அங்கேயே சரிந்து கீழே விழுந்துள்ளார். அப்போது டேவிட் ராஜன் எதிரில் 3 சிறுவர்கள் வந்து நின்றுள்ளனர். 3 பேருக்கும் தலா 13, 15 மற்றும் 16 வயது மட்டுமே இருக்கும். டேவிட் ராஜன் மயக்கம் அடையாமல் தங்களை நோட்டம் விடுவதை பார்த்த சிறுவர்கள் மீண்டும் கற்கலால் டேவிட் ராஜனை கொடூரமாக தாக்கி உள்ளனர். முகம், மார்பு பகுதியில் பலத்த காயமடைந்த் டேவிட் ராஜன், அங்கேயே நினைவிழந்து மயங்கினார். அதன்பின் அந்த 3 சிறுவர்களும் டேவிட் ராஜன் வைத்திருந்த செல்போனை திருடிவிட்டு அங்கிருந்து தப்பினர்.

இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் விரைந்த போலீசார், காயமடைந்த டேவிட் ராஜனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்பகுதியில் செயல்பட்ட கடைகளில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் இருட்டில் மறைந்திருந்த 3 சிறுவர்கள் டேவிட் ராஜனை மீண்டும் மீண்டும் கல்லால் தாக்குவதும், டேவிட் ராஜன் மயங்கி சரிந்ததும் அவருடைய செல்போனை சிறுவர்கள் திருடி செல்வதும் பதிவாகி இருந்தது. இதனடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதே பகுதியில் போதையில் சுற்றித்திருந்த 3 சிறுவர்களையும் பிடித்த போலீசார் கூர்நோக்கு இல்லத்தில் சேர்த்தனர்.
இதையும் படிங்க: செல்போனால் பறிபோன 2 உயிர்கள்... உயிரை மாய்த்துக்கொண்ட அண்ணன் - தங்கை..! புதுக்கோட்டையில் அரங்கேறிய சோகம்..!