இந்த திட்டம் தமிழக அரசின் ஒத்துழைப்பு இல்லாததால் கைவிடப்படுவதாக கடந்த 10-ந் தேதி சென்னை பெரம்பூர் ரயில்பெட்டித் தொழிற்சாலையில் ஆய்வு மேற்கொண்டபோது மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியிருந்தார்.

இதற்கு தமிழக அரசு சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக விளக்கம் அளித்த தமிழக அமைச்சர் சிவசங்கர், இத்திட்டத்திற்காக ஆயிரம் ஹெக்டேர் நிலம் ஆர்ஜிதம் செய்து தரும்படி ரயில்வே அமைச்சகம் கேட்டுக் கொண்டதை நினைவுகூர்ந்தார். இதன்படி மதுரை, விருதுநகர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்களிடம் நிலம் எடுப்பு பணிகளை இரண்டு பிரிவாக செய்து தரும்படி தமிழக அரசு கூறியதை 2024-ம் ஆண்டு கடிதத்தை மேற்கோள் காட்டி அமைச்சர் கூறியிருந்தார்.
இதையும் படிங்க: டங்ஸ்டன் திட்டத்திற்கு மத்திய அரசிடம் ‘ஓகே’ சொன்ன தமிழக அரசு... திமுகவின் முகமூடியைக் கிழித்தெறிந்த அண்ணாமலை!
இத்திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யும்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினே கடிதம் எழுதியதையும், 3 மாவட்ட ஆட்சியர்கள் தெற்கு ரயில்வேக்கு எழுதிய கடிதங்களையும் அமைச்சர் சிவசங்கர் சுட்டிக்காட்டி இருந்தார். மீளவிட்டான் முதல் மேல்மருதூர் வரையிலான 18 கிலோ மீட்டர் தொலைவுக்கு பணிகள் முடிக்கப்பட்டு விட்டதாக தெற்கு ரயில்வே பொதுமேலாளர் 2024-ம் ஆண்டு பதில் கடிதம் எழுதியதையும் அவர் எடுத்துரைத்தார். உண்மை இவ்வாறு இருக்க ரயில்வேத்துறை அமைச்சர் எவ்வாறு இப்படி கூறலாம் என அமைச்சர் சிவசங்கர் வினவியிருந்தார்.

இந்த சூழ்நிலையில் தெற்கு ரயில்வே துறை சார்பில் விளக்கம் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. அதில் ஜனவரி 10-ந் தேதி மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களை சந்தித்தபோது குளறுபடி ஏற்பட்டு விட்டதாக கூறியுள்ளது. அதாவது மதுரை - தூத்துக்குடி ரயில்பாதை என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு தனுஷ்கோடி - ராமேஸ்வரம் இடையிலான ரயில்பாதை என அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் புரிந்து கொண்டு விட்டதாகவும், அந்த திட்டமே கைவிடப்படுவதாக அமைச்சர் கூறியதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

எனவே திட்டமிட்டபடி மதுரை - தூத்துக்குடி இடையிலான ரயில்பாதை விரைந்து முடிக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வரும் என்றும் தமிழக அரசு ஒத்துழைப்பு நல்கவில்லை என்று கூறியது இந்த திட்டம் தொடர்பாக அல்ல என்றும் கூறி சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது தெற்கு ரயில்வே.
இதையும் படிங்க: எல்லை மீறி பேசுறீங்க சீமான்..அரசியலுக்கு நல்லது இல்ல..திருமா வார்னிங் !