ஆந்திர மாநிலம் ஏலூர் அருகே உள்ள ஜங்காரெட்டி கூடத்தை சேர்ந்த சசி என்பவர் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து அதே பகுதியைச் சேர்ந்த அவரது காதலரான பவன் என்பவருடன் தனது மூன்று குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் பவன் சசியின் மூன்று குழந்தைகளையும் அவ்வப்போது அடித்து துன்புறுத்திலில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
சம்பவத்தன்று சசியின் குழந்தைகளான உதயகுமார், ராகுல், ரேணுகா ஆகியோரை போன் சார்ஜர் மூலம் பவன் கடுமையாக தாக்கியுள்ளார். இது மட்டுமின்றி தாக்கிய இடங்களில் மிளகாய் தூளை கொட்டி துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார். இதனை அடுத்து மூன்று குழந்தைகளும் வலி தாங்காமல் கதறிய சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் பவன் வீட்டிற்கு சென்றுள்ளனர்.
இதையும் படிங்க: குங்குமப்பூ சட்டை… கையில் ருத்ராட்ச மாலை… கங்கையில் நீராடி பக்தி பரசவசத்தில் மூழ்கிய பிரதமர் மோடி..!
தொடர்ந்து உடலில் ரத்த காயங்களால் வலி தாங்க முடியாமல் கதறிய குழந்தைகளை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் பவனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பாதிக்கப்பட்ட குழந்தைகள் கூறுகையில், கடந்த சில நாட்களாகவே பவன் அவர்களை கொடுமைப்படுத்தி வருவதாகவும் அதனை அவர்களது தாய் ஒன்றும் செய்ய முடியாமல் வேடிக்கை பார்த்து வந்ததாகவும் பாதிக்கப்பட்ட குழந்தைகள் கண்ணீர் மல்க வேதனை தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: குடிமகன்களுக்கு குஷி..! ஏப்ரல் முதல் நடைமுறைக்கு வருகிறது காலி பாட்டில்களை திரும்ப பெரும் திட்டம்