அமைச்சர் கே. என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் மற்றும் இளைய சகோதரர் மணிவண்ணன் மற்றும் அமைச்சர் கே.என்.நேருவின் மகன் அருள் நேரு சொந்தமான சென்னையில் உள்ள டிவிஹெஹச் நிறுவனத்திற்கு தொடர்புடைய ஐந்து இடங்களில்அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் திருச்சி தலைநகர் ஐந்தாவது குறுக்குத்தெரு பகுதியில் உள்ள அமைச்சர் கே.என்.நேருவின் மகன் அருள் நேருவின் வீடு, தில்லைநகர் 11வது குறுக்கு தெருவில் உள்ள ராமஜெயம் இல்லத்திலும், அரசு தலைமை மருத்துவமனை பின்புறம் உள்ள வண்ணாரப்பேட்டையில் உள்ள கே.என்.நேருவின் மகன் அருணுக்கு சொந்தமான இல்லம் உட்பட திருச்சியில் 3 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

அதேபோல் கோவை மாவட்டம் மசக்கிப்பாளையம் பகுதியில் உள்ள அமைச்சர் கே.என்.நேருவின் இளைய சகோதரர் மணிவண்ணன் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலையில் இருந்து சோதனை நடத்தி வருகின்றனர். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், கணக்கில் பல ஆவணங்கள் காட்டாமல் பல்வேறு கட்டுமான நிறுவனங்களை நடத்தி வருவதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நடத்தப்பட்ட சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை அடிப்படையாக கொண்டு சோதனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. மேலும் கோவை மற்றும் திருச்சியிலும் துப்பாக்கி ஏந்திய சிஆர்பிஎஃப் போலீஸ் பாதுகாப்புடன் சோதனைகள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தேர்தலில் விஜய்யை திமுக சந்திக்கும்.. தொண்டர்களுக்கு கட்டளையிட்ட அமைச்சர் கே.என். நேரு.!!
சென்னையில் அருண் நேருவுக்குச் சொந்தமான ஆழ்வார்பேட்டையில் உள்ள இடத்தில் செயல்பட்டு வரும், கேஜிஎஸ் என்ஆர் ரைஸ் இண்டஸ்ட்ரியல் பிரைவேட் லிமிட் என்கிற நிறுவனத்திலும், மயிலாப்பூர் சிஐடி காலனியில் இருக்கக்கூடிய பிரகாஷ் என்பவருது வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல அடையாறு, காந்தி நகர், ஆரியபுரம், கிருஷ்ணாபுரி, சாஸ்திரி நகர் உள்ளிட்ட 7 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்... கோவை, மதுரை மக்களுக்கு அமைச்சர் சொன்ன குட்நியூஸ்..!