தவெக என்ற அரசியல் கட்சியை தொடங்கியுள்ள விஜய் மாணவர்களை சந்திப்பது, சமூக பிரச்சனைகளுக்கு கண்டனம் தெரிவிப்பது போன்றவற்றின் மூலம் முழு நேர அரசியல்வாதியாக செயல்பட்டு வருகிறார். இந்த நாளில் ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் நோன்பு இருப்பதால், தவெக சார்பில் இப்தார் நோன்பு திறக்கப்படும் என்றும் அதில் ஒருநாள் முழுவதும் நோன்பு இருந்து விஜய் இப்தாரில் நோன்பு திறப்பார் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி தவெக சார்பாக நேற்று ஒய்எம்சிஏ மைதானத்தில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. தவெக சார்பாக ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் 5 நிர்வாகிகளுக்கு அழைப்பு விடப்பட்டது. இஸ்லாமியர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இப்தாரில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள் என்பதால் அவர்களுக்கு மட்டன் பிரியாணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இப்தாரில் தவெக கட்சி கொடி தவிர்க்கப்பட்டது.
இதையும் படிங்க: அறவழி போராட்டத்தில் அராஜகம் பண்றீங்களா?... திமுகவை வெளுத்து வாங்கிய விஜய்...!
நோன்பு திறக்கும் ஒரு மணி நேரத்துக்கு முன்னதாக உள்ளே வந்த இஸ்லாமியர்களை போல் தொப்பியுடன் வந்த விஜய் இஸ்லாமியர்களுடன் சேர்ந்து நோன்பு திறந்தார். விஜய் இப்தாரில் பங்கேற்பதால் அவரை பார்ப்பதற்காக அதிகளவில் ரசிகர்கள் திரண்டனர். அனுமதி அட்டை கொடுக்கப்பட்டும் பலர் தடுப்புகளை கடந்து உள்ளே செனறனர். இதனால் ஒய்எம்சிஏ மைதான நுழைவு வாயிலில் இருந்த கண்ணாடி கதவு உடைந்தது.

ஒரு கூட்டத்தை கடுப்படுத்த முடியாமல் பவுன்சர்கால் திரண்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்நிலையில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் ரூ.1 லட்சம் வரை திருடப்பட்டுள்ளதாக புகார் கூறப்பட்டுள்ளது. 3 பேரிடம் இருந்து பணம் திருடப்பட்டுள்ளதாக காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் பங்கேற்ற முகமது இஸ்மாயில் மற்றும் அப்துல் அபுதாஹீர் ஆகியோரிடம் இருந்து ரூ.63 ஆயிரமும், ரூ.42 ஆயிரமும் திருடப்பட்டுள்ளது. விஜய் நிகழ்வில் பணம் திருடப்பட்ட சம்பவம் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: ஊடக விளம்பரத்துக்கு தான் விஜய் திமுகவை குறை சொல்றாரு... கே.என்.நேரு பதிலடி..!