மும்பை தீவிரவாதத் தாக்குதலில் முக்கியக் குற்றவாளியான தஹாவூர் ராணா, தன்னை இந்தியாவுக்கு நாடு கடத்தும் முடிவுக்கு தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்த மனுவை ஏற்க அமெரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
இந்த மனுவை அவசரமாக ஏற்று, இந்த உத்தரவுக்கு தடைவிதிக்க வேண்டும் என்று தஹாவூர் ராணா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் மனுவை தள்ளுபடி செய்தார். பாகிஸ்தானைப் பூர்வீகமாகக் கொண்டவரம், கனடாவைச் சேர்ந்தவரான தஹாவூர் ராணா மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு முளையாக இருந்து தேவையான உதவிகளைச் செய்தவர். இவர் தற்போது கைது செய்யப்பட்டு லாஸ் ஏஞ்செல்ஸ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மும்பையில் கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 26 முதல் 29ம் தேதிவரை பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 164 அப்பாவி மக்கள், பாதுகாப்புப் படை வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் பல தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுவீழ்த்திய நிலையில் உயிருடன் பிடிபட்ட தீவிரவாதி அஜ்மல் கசாப்புக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இதையும் படிங்க: கர்ப்பமாக இருப்பதாய் பயம் காட்டிய கள்ளக்காதலி.. 2 லட்சம் கேட்டு மிரட்டல்.. வீடியோ காலில் விஷம் குடித்த டெய்லர் காதலன்..!
இந்த தாக்குதலுக்கு மூளையாக இருந்த பாகிஸ்தானைச் சேர்ந்த அமெரிக்காவில் வசிக்கும் தீவிரவாதி டேவிட் கோல்மன் ஹெட்லி என்ற தாவுத் கிலானியுடன், தொழிலதிபர் தஹாவூர் ராணா நெருக்கமாகவும், துணையாகவும் இருந்தார். மும்பை தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கு தேவையான உதவிகள் செய்வது, அவர்களுக்கு நிதியுதவி செய்தது லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் மும்பையில் தாக்குதல் நடத்த உதவிகளை தஹவ்வூர் ராணா செய்தார் என்று குற்றம்சாட்டப்பட்டது.

மும்பை தாக்குதலில் அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட தஹாவூர் ராணா லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவரை இந்தியாவுக்கு கொண்டு வந்து விசாரணை நடத்த அனுமதிக்குமாறும், அவரை இந்தியாவுக்கு கொண்டு செல்ல அனுமதிக்குமாறும் இந்திய அரசு சார்பில் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் ராணாவின் மனுவை விசாரிக்க மறுத்து, அவரை இந்தியாவுக்கு அனுப்ப தடையில்லை என உத்தரவிட்டது.
இதையடுத்து, தஹாவூர் ராணா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் அவசரமனுத் தாக்கல் கடந்த மாதம் 27ம் தேதி செய்யப்பட்டது. அதில், “தன்னை இந்தியாவுக்கு நாடு கடத்தும் முடிவை செயல்படுத்த வேண்டும், அதற்கு தடை விதிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்த மனுவை நீதிபதி எலானா காகன் தள்ளுபடி செய்து கடந்த 6ம் தேதி (நேற்று) உத்தரவிட்டார் என்று இணையதளத்தில் தெரிவி்க்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதிதாக மற்றொரு மனுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ராபர்ட்ஸிடம் தாக்கல் செய்து நாடு கடத்தும் முடிவை நிறுத்திவைக்கக் கோரி மனுத் தாக்கல் செய்தனர்.

அந்த மனுவில் ராணா கூறுகையில் “ என்னை இந்தியாவுக்கு அனுப்பி வைக்கும் முடிவில் இந்தியா சட்டங்களை மீறியுள்ளது. கொடுமைப்படுத்துதலுக்கு எதிரான அமெரிக்காவின் சட்டத்தையும் இந்தியா மீறியுள்ளது. என்னை இந்தியாவுக்கு அனுப்பினால் என்னை கொடுமைப்படுத்துவார்கள் என்ற அச்சம் நிலவுகிறது. நான் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர், அதிலும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர் என்பதால் என்னை மனரீதியாகக் காயப்படுத்துவார்கள். மேலும் தனக்கு உடல்நிலை சரியில்லை, உயருக்கு ஆபத்துதரக்கூடிய நோய் இருக்கின்றன. பிளாடர் கேன்சர், சிறுநீரக நோய், ஆஸ்துமா இருக்கிறது” எனத் தெரிவித்திருந்தார்.
ஆனால், ராணாவின் மனுவை அவசரமாக விசாரிக்க உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ராபர்ட்ஸ் இன்று மறுத்து மனுவை நிராகரித்தார்.
இதையும் படிங்க: Share market: why is down today?: பங்குச்சந்தையில் ஒரே நாளில் ரூ.8.80 லட்சம் கோடி காலி..! முதலீட்டாளர்கள் கண்ணீர்..! காரணம் என்ன?