நடிகர் தனுஷ் பல முன்னணி நடிகர் வரிசையில், உலகம் முழுவதும் கலக்கும் நடிப்பின் 'அசுரன்' என்று சொல்லலாம். இவர் பொல்லாதவன் படத்தில் ஓட்டிய ஒரு பைக்கால் இன்று வரை அதன் விற்பனை அமோகமாக இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் திருடா திருடி, படிக்காதவன், வேங்கை என படிப்படியாக உயர்ந்து வேலையில்லா பட்டதாரியாக நடித்து இன்று ஒரு வேலை இவரை பார்த்து விட மாட்டோமா என்று ஏங்கும் அளவிற்கு பிஸியாக இருக்கிறார் நடிகர் தனுஷ்.

இவர் தனது சினிமா வாழ்க்கையின் ஆரம்பத்தில் இருந்து பல அவமானங்களை சந்தித்தாலும், பலர் பகைத்தாலும், இன்றளவும் சர்சைக்குரியவராக இருந்தாலும், தனது ஒரே சிரிப்பில் அத்தனை வலிகளையும் அடக்கி "எண்ணம் போல் வாழ்க்கை" என்று கூறிவிட்டு நடிகர், பாடகர், எழுத்தாளர் என பல அவதாரங்ககளை தன் கையில் எடுத்து, தற்பொழுது வெற்றி இயக்குனராக மாறி நிற்கிறார். தனக்கு வந்த சோதனைகளை சாதனைகளாக மாற்றி, இன்றைய இளைஞர்களுக்கு ரோல் மாடலாக இருக்கிறார். ரஜினி என்ற போர்வையில் மறைந்திருக்கிறார் தனுஷ் என பலர் விமர்சித்தாலும் தனது கடுமையாக உழைப்பால் ஹாலிவுட்டையே கலக்குகிறார் என்ற பெயரை பெற்றவர்.
இதையும் படிங்க: என்ன சிம்பு சார் மனசுலாயோ... ஃபர்ஸ்ட் இவர் படத்துல தான் நடிக்கனும்.. ரசிகர்கள் போட்ட கண்டிஷன்..!

இப்படி பலராலும் விமர்சனங்களையும் பாராட்டுகளையும் பெற்று வரும் தனுஷ், முன்னதாக ப. பாண்டி மற்றும் ராயன் படங்களை இயக்கியுள்ள நிலையில், தற்பொழுது "நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்" என்ற தனது மூன்றாவது படத்தை வெளியிட்டு உள்ளார். முற்றிலும் இளைஞர்களை மையமாக வைத்து இன்றைய தலைமுறையின் காதலை எடுத்துரைக்கும் படமாக அமைந்துள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை கொடுத்துள்ளது. தனுஷின் "நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்" படத்தில் அவரது அக்கா மகன் பவிஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் மேத்யூ தாமஸ், அனிகா சுரேந்திரன், பிரியா வாரியர், வெங்கடேஷ் மேனன் உள்ளிட்ட நடிகர்கள் இந்த படத்தில் இணைந்து நடித்து உள்ளனர். ஒரு பக்கம் பிரதீப் ரங்கநாதனின் "டிராகன்" மறுபக்கம் தனுஷின் "நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்" என்ற படமும் ஒரே நாளில் வெளியானாலும் இரண்டு படமும் ஹிட் கொடுத்துள்ளது.

இந்த நிலையில், ஹனிமூன் பிஸியில் தனது கணவருடன் சென்று, முதல் கப்புல்ஸ் படமாக, தனுஷின் நீக் படத்தை பார்த்த நடிகை கீர்த்தி சுரேஷ், தனது X தள பக்கத்தில் தனுஷை பாராட்டி பதிவிட்டு உள்ளார். இப்பதிவில் இது போன்ற க்யூட்டான கதைக்களத்தில் காதல் படங்களை பார்த்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது, இப்படி ஒரு படத்தை தனுஷ் இயக்கியுள்ளது தனக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. தனுஷை போலவே பவிஷ் இருப்பதால் அவர் சிரிப்பு கூட தனுஷை நியாபகப்படுத்துவதாக உள்ளது. ஆக, தனுஷிற்கும் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் தன்னுடைய வாழ்த்துக்களையும் அவர் பகிர்ந்துள்ளார். இதனை தொடர்ந்து படம் பார்க்க சென்ற இடத்தில் தனுஷை சந்திக்க வாய்ப்பு இருக்கும் என்று நினைத்ததாகவும் ஆனால் பார்க்க முடியவில்லை என்றும் கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.

கீர்த்தி சுரேஷின் பதிவை பார்த்த ரசிகர்கள், ஓஹோ கீர்த்தியே, படத்தை பார்த்து வாழ்த்துறாங்கன்னா படம் நன்றாக இருக்கும் போல என படத்தை காணாதவர்கள் தியேட்டருக்கு விரைந்துள்ளனர்.
இதையும் படிங்க: பயம் இருக்கனும் சாமி... படத்துக்கே இத்தனை கோடி செலவுன்னா...வசூல் எத்தனை கோடியா இருக்கும்..!