ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா விக்கிரபாண்டியபுரம் வலசை கிராமத்தை சேர்ந்தவர் உத்திரகுமார் (வயது 35). முதுகுளத்தூர் வழக்கறிஞர் சங்கத்தில் பதிவு செய்த உத்திரகுமார் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. பல ஆண்டுகளாக ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் உத்திரகுமார், வாரச்சந்தை, மீன் மார்க்கெட் போன்ற பொது ஏலங்களிலும் கலந்து கொள்வார். இவர் மீது ரியல் எஸ்டேட் மோசடி வழக்குகள், கொலை வழக்கு, கொடுக்கல் வாங்கல் வழக்குகள், அடிதடி வழக்குகள், பொது ஏலத்தில் கலந்து கொண்டு தகராறு செய்த வழக்குகள் என பல வழக்குகள் நிலுவையில் உள்ளது.

கடந்தாண்டு சென்னையில் பழனிசாமி என்பவரை கொலை செய்த வழக்கில் உத்திரகுமார் சிறை சென்றார். பின்னர் ஜாமினில் வெளிவந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பரமக்குடி தீயணைப்பு நிலையம் அருகே உள்ள அவரது சகோதரி வீட்டிற்கு உத்திரகுமார் சென்றுள்ளார். இரவில் தனது வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது அவரை மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த ஹெல்மெட் அணிந்து வந்த 3 மர்ம நபர்கள், ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் வழிமறித்துள்ளனர்.
உத்திரகுமார் சுதாகரிப்பதற்குள், அந்த மர்ம நபர்கள் அவரை மறைத்து வைத்திருந்த வாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பினர். இதில் உத்தரகுமாரின் தலை, கழுத்து உள்ளிட்ட பகுதியில் வெட்டு விழுந்தது.
இதையும் படிங்க: போலீசுக்கு விழுந்த அடி! அரைநிர்வாணத்தில் போலீசுடன் தகராறு.. வழக்கறிஞர் கவுன்சில் தலைவர் அட்டூழியம்..

உத்திரகுமார் நிலைகுலைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். வாளால் வெட்டியதில் அவரது தலை முற்றிலும் சிதைந்து போனது. உத்திரகுமார் கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்து அவரது உறவினர்கள் ஓடி வந்தனர். அவரது உடலைப் பார்த்து கதறி அழுதனர். கொலை குறித்து தகவல் அறிந்தத பரமக்குடி நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தொடரந்து உடலை மீட்ட போலீசார் ஆம்புலன்சில் மூலம் பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து உத்திரகுமாரின் அக்கா மகன் பாலமுருகன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் பரமக்குடி நகர் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணையை துவங்கினர்.

இதில் கூலிப்படையினருக்கு தொடர்பு இருக்கிறதா? அல்லது ஏதேனும் முன் விரோதத்தின் காரணமாக இக்கொலை நடந்து உள்ளதா? அல்லது பழிக்கு பலியா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டனர். கொலையாளிகளை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்ட தேடுதல் வேட்டை நடந்தது. கடந்தாண்டு பழனிசாமி என்பவர் கொலை வழக்கில் உத்தரகுமார் கைதான நிலையில் பழனிச்சாமியின் மனைவி ராஜேஸ்வரி, மகள் லேகாஸ்ரீ, மகன் விஷ்ணு பிரதான் மற்றும் மூன்று பேர் மீது வழக்குப் பதிவு செய்து, கொலையாளிகளை தேடினர். பழனிச்சாமி கொலைக்கு பழி தீர்க்க உத்திரகுமார் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் போலீஸார் விசாரித்தனர்.

இந்நிலையில் உத்தரகுமார் வெட்டிக் கொலை செய்யப்பட்ட இடத்தில் இருந்த சிசிடிவி கேமிரா மூலாம் கொலையாளியின் வாகன எண்ணை போலீசார் கண்டுபிடித்தனர். அந்த வண்டி பரமக்குடி அருகே உள்ள செக்போஸ்ட்டை கடந்தபோது போலீசார் மடக்கி பிடித்தனர். வண்டியை ஓட்டிய தீனதயாளன் என்பவரை பிடித்து விசாரித்தபோது, தானும் 2 நண்பர்களும் சேர்ந்து உத்தரகுமாரை கொலை செய்ததாக ஒப்புக் கொண்டனர். இதையடுத்து ராமநாதபுரம் பகுதியில் பதுங்கி இருந்த கொலையாளிகளை போலீசார் கைது செய்தனர். போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அவர்கள், பரமக்குடி வைகை நகர் பகுதியை சேர்ந்த தீனதயாளன், அப்துல் கலாம், கிரண் என்பது தெரிந்தது. மூன்று இளைஞர்களையும் கொலை நடந்த 24 மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர். முதல் கட்ட விசாரணையில் தீனதயாளனும், உத்திரகுமாரும் இடையே இருந்த முன்பகை காரணமாக கொலை செய்ததாக குற்றவாளிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: தொழிற்சாலையில் பற்றிய தீ.. 7 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்..