ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட பாம்பன் ரயில் தூக்குப் பாலம், நூறு ஆண்டுகளைக் கடந்தும் செயல்பட்டு வந்தது. இந்த பாலத்தில் அடிக்கடி தொழில்நுட்ப கோளாறு, விரிசல் போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டதால் 2019 ஆண்டு ரயில்வே மானியக் கோரிக்கைகளின் போது பாம்பன் புதிய ரயில் பாலம் கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டு பழைய ரயில் பாலத்தின் அருகிலேயே புதிய ரயில் பாலம் கட்ட பணிகள் தொடங்கப்பட்டது.

2019 ஆம் ஆண்டு மார்ச் ஒன்றாம் தேதி பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 11-ம் தேதி பாம்பனில் புதிய ரயில்வே பாலம் கட்டுவதற்காகப் பூமி பூஜை போடப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டது. கொரோனா, கடல் சீற்றம் போன்ற காரணங்களால் பல ஆண்டுகளாக நடந்து வந்த கட்டுமான பணி நிறைவடைந்து, நாளை ராமநவமி நன்னாளில் பிரதமர் மோடி பாலத்தை திறந்துவைக்கவுள்ளார்.
இதையும் படிங்க: காங்கிரஸ் குரல் டெல்லியில் எதிரொலிக்கணும் ! பிரதமருக்கு எதிராக கறுப்புக் கொடி போராட்டம்...செல்வபெருந்தகை தடாலடி

ராமேஸ்வரம் அடுத்த பாம்பனில் சுமார் 550 கோடி மதிப்பீட்டில் செங்குத்தாக தூக்கக்கூடிய தூக்கு பாலம் கடந்த ஒரு மூன்று ஆண்டுகளுக்கு மேல நடைபெற்று வந்த நிலையில் தற்போது பணிகள் நிறைவடைந்துள்ளன. இதனை அடுத்து நாளை பாரத பிரதமர் நரேந்திர மோடி ராமேஸ்வரத்துக்கு நேரில் வருகை தந்து பாம்பன் பாலத்தை திறந்து வைக்கிறார். இதில் கூடுதல் சிறப்பாக திறப்பு விழா அன்று ராமேஸ்வரத்திலிருந்து சென்னை தாம்பரத்திற்கு புதிய ரயில்சேவை ஒன்றும் தொடங்கப்படவுள்ளது. புதிய ரயில் பாலம் பாலம் மொத்தம் 2,078 மீட்டர் நீளமும், கடல் மட்டத்திலிருந்து 6 மீட்டர் உயரம் கொண்டு அமைக்கப்பட்டு, 333 கான்கிரீட் அடித்தளங்கள், 101 தூண்களும், 99 இணைப்பு கர்டர்களையும் பொருத்தி அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பிரதமரின் வருகை ஒட்டி பாதுகாப்பு பணிக்காக 10 எஸ்பி, 15 டிஐஜி, 40 டிஎஸ்பி உள்ளிட்ட 3500 போலீசாரை உட்படுத்தி ராமேஸ்வரம் தீவு முழுவதும் மூன்றடுக்கு பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர் பாம்பன் பாலம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயில், நிகழ்ச்சி நடைபெறும் ஆலயம் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் .
இதையும் படிங்க: இந்தியப் பொருட்களுக்கு வரி விதித்த ட்ரம்ப்.. மெளன விரதத்தில் மோடி.. வெளுத்து வாங்கும் எதிர்க்கட்சி.!!