மும்மொழி கொள்கை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் தொடர்பாக திமுக எம். பி. அருண் நேரு விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ஒன்றிய அரசின் மொழி கொள்கையில் தமிழ்நாட்டிலும் கூட தமிழ் மொழிக்கு இடமில்லை என்பது PM Shri கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் மூலம் மீண்டும் தெளிவாகிறது. திருச்சிராப்பள்ளியில் உள்ள PM Shri கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 2025-26 கல்வியாண்டிற்கான ஒப்பந்த ஆசிரியர் பணியிடங்களுக்காக நேர்காணல் அறிவிப்பை வெளியிட்டதாக கூறினார்.
இதையும் படிங்க: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.. கம்யூட்டர் லேப்பில் அத்துமீறிய ஆசிரியர்.. புகார் பெட்டியால் வெளிவந்த உண்மை..!

இதில், PGT (பட்டதாரி ஆசிரியர்): பொருளாதாரம், ஆங்கிலம்; TGT (பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்): இந்தி, சமஸ்கிருதம், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் மற்றும் PRT (முதன்மை ஆசிரியர்): பொது மற்றும் இசைபோன்ற பாடங்களுக்கு ஆசிரியர்கள் தேவைப்படுகின்றனர் என கூறப்பட்டுள்ளது.
ஆனால், தமிழ் மொழிக்கு எந்த பணியிடமும் குறிப்பிடப்படவில்லை. இது தமிழ்நாட்டின் மொழியை கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் கற்பிக்க விருப்பமில்லை என்பதை உறுதிப்படுத்துகிறது என சுட்டிக்காட்டினார்.

தமிழ்நாடு முழுவதும் உள்ள 49 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், RTI தகவல்களின்படி, தமிழ் ஆசிரியர்கள் இல்லை, ஆனால் இந்தி மற்றும் சமஸ்கிருத ஆசிரியர்கள் பெருமளவில் உள்ளனர் என்றும் இந்த பள்ளிகள் தற்போது PM Shri என்ற பெயரில் மறுபெயரிடப்பட்டு, தேசிய கல்வி கொள்கை மற்றும் அதன் மும்மொழி கொள்கையை பின்பற்ற வேண்டும் என்று கூறுவதாகவும் தெரிவித்தார்.

ஆனால் உண்மையில், இந்த பள்ளிகள் இன்னும் இருமொழி கொள்கையை (இந்தி மற்றும் ஆங்கிலம்) மட்டுமே பின்பற்றுவதாகவும், தமிழ்நாட்டின் மொழியான தமிழை கூட அவர்கள் கற்பிக்க விரும்பவில்லை என்றும் ஆனால் இப்பள்ளிகளில் சமஸ்கிருதம் கற்பிக்கப்படுகிறது எனவும் விளக்கமளித்தார்.
இதையும் படிங்க: பள்ளி, கல்லூரிகளின் பெயர்களில் உள்ள சாதிப்பெயர்கள் நீக்கப்படுமா? தமிழக அரசு விளக்கமளிக்க நீதிமன்றம் உத்தரவு...!