பொள்ளாச்சியை அடுத்த செங்குட்டை பாளையத்தில் உள்ள சுவாமி சித்பவானந்தா மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவி கடந்த சில நாட்களுக்கு முன்பு பூப்பெய்தி உள்ளார்.இதனை அடுத்து முழு ஆண்டு தேர்வு நடப்பதால் பள்ளி நிர்வாகம் மாணவியை தேர்வு எழுத அனுமதித்துள்ளது.இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை மற்றும் புதன்கிழமை நடைபெற்ற தேர்வுகளில் பள்ளி மாணவி தனிமைப்படுத்தப்பட்டு வகுப்பறைக்கு வெளியே அவரை வைத்து தேர்வு எழுத வைக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து அவரது தாயார் வீடியோ பதிவு செய்ததுடன், பள்ளி நிர்வாகத்திடமும் கேட்டுள்ளார்.ஆனால் முறையான பதில் கிடைக்கவில்லை.இது குறித்து சமூக வலைதளங்களில் வீடியோ வெளியானதை தொடர்ந்து பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் குறிப்பிட்ட பள்ளியில் விசாரணை மேற்கொண்டனர்.விசாரணையில் சிறுமி தனிமைப்பபடுத்தப்பட்ட சம்பவம் உறுதியானதை தொடர்ந்து சிறுமியை தனிமைப்படுத்த உத்தரவிட்ட பள்ளி முதல்வர் ஆனந்தி தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: பீர் பாட்டிலுடன் இளைஞர்கள் அட்ராசிட்டி.. போதை தெளிந்ததும் கையில் காப்பு.. செமயாக கவனித்த போலீஸ்..!

இந்நிலையில் பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை சுரேந்திரநாத் இது குறித்து பள்ளி தாளாளர் தங்கவேல் பாண்டியன்,முதல்வர் ஆனந்தி மற்றும் அலுவலக உதவியாளர் சாந்தி உள்ளிட்ட மூவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெகமம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்துள்ள நெகமம் காவல் நிலைய போலீசார் பள்ளி தாளாளர் தங்கவேல் பாண்டியன்,பள்ளி முதல்வர் ஆனந்தி மற்றும் அலுவலக உதவியாளர் சாந்தி ஆகிய மூவர் மீதும் 3 (1) r, 3 (1) (za) D SC/ST வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க: கல்லா பெட்டியில் கை வைத்த கேசியர்.. காட்டிக்கொடுத்த சிசிடிவி.. 5 நாளில் ரூ.40 ஆயிரம் முறைகேடு.. அப்போ 7 வருசத்தில்.?