கேரள மாநில பாஜகவுக்கு தலைவராக முன்னாள் மத்திய அமைச்சரும், தொழிலதிபருமான ராஜீவ் சந்திரசேகர் நியமிக்கப்பட உள்ளார். இவரை எதிர்த்து யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை என்பதால், போட்டியின்றி தலைவராகிறார்.
திருவனந்தபுரத்தில் இன்று நடந்த பாஜக மாநில காரியகமிட்டிக் கூட்டத்தில் பங்கேற்ற ராஜீவ் சந்திரசேகர் கூட்டத்தின் முடிவில் கட்சியின் தலைவர் பதவிக்கு தலைமை அலுவலமான மாரார்ஜி பவனில் வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

பாஜக கட்சியின் உள்கட்சி தேர்தலின் தேர்தல் அதிகாரி மூத்த தலைவர் நம்பூதரி, மூத்த தலைவர்கள் சுரேந்திரன், வி.முரளிதரன் மற்றும் சுரேஷ் கோபி முன்னிலையில் ராஜீவ் சந்திரசேகர் வேட்புமனுத் தாக்கல் செய்தார்.
பாஜக மாநிலத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் ராஜீவ் சந்திரசேகருக்கு எதிராக எந்த வேட்பாளரும் நிற்கவில்லை, போட்டியின்றி தேர்வு செய்யப்படுகிறார். பாஜக மாநில காரியக்கமிட்டிக் கூட்டம் இன்று நடந்தது. இதில் மத்திய பார்வையாளர் பிரஹலாத் ஜோஷி, பிரகாஷ் ஜவடேகர் இருவரும் ராஜீவ் சந்திரசேகர் பெயரை தலைவர் பதவிக்கு முன்மொழிந்தனர்.
இதையும் படிங்க: கேரளாவில் பாஜ நிர்வாகி சுட்டுக்கொலை.. வேட்டை துப்பாக்கியால் கதை முடிப்பு.. பேஸ்புக்கில் பதிவிட்டபடி அரங்கேறிய கொலை..!
மாநில பாஜக தலைவராக 2020ம் ஆண்டிலிருந்து இருக்கும் கே.சுரேந்திரனுக்குப் பதிலாக ராஜீவ் சந்திரசேகர் நியமிக்கப்படஉள்ளார். திருவனந்தபுரம் தொகுதியில் 2024ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் சசிதரூக்கு எதிராக கடும் போட்டியை ராஜீவ் அளித்தார். ஆனால், இறுதியில் சசி தரூர் வென்றார். உண்மையில் ராஜீவ் சந்திரசேகர் கர்நாடகமாநிலத்தைச் சேர்ந்தவர், அங்கிருந்து மாநிலங்களவைக்கு 3 முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதன்பின் கேரளாவுக்கு தேர்தலுக்கா ராஜீவ் மாறினார்.

கேரள மாநிலத்தில் தனது செல்வாக்கை பரப்ப நினைக்கும் பாஜக இளைஞர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்த ராஜீவ் சந்திரசேகரை தலைவராக நியமிக்கிறது. 2026ம் ஆண்டு நடக்கும் சட்டப்பேரவைத் தேர்தலுக்காக பூத் அளவில் நிர்வாகிகளை பாஜக நியமிக்க இருக்கும் நிலையில் ராஜீவ் சந்திரசேகர் தலைவராகிறார்.
1990களில் பெரிய தொழில்முனைவோராக இருந்த ராஜீவ் சந்திரசேகர், பிபிஎல் மொபைல் போனை நிறுவியது இவர்தான். இந்தத் துறையில் இருந்து 10 ஆண்டுகளுக்குப்பின் வெளியேறி, ஜீபிட்டர் கேபிடல் முதலீட்டு நிதி சேவையை நிறுவனத்தை தொடங்கினார்.
இப்போது நாட்டின் பல்வேறு நகரங்களில் இவரின் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதற்கிடையே ஏசியாநெட் செய்தி சேனலையும் சந்திரசேகர் விலைக்கு வாங்கிய சந்திரசேகர் அதை நடத்தி வருகிறார். கடந்த பாஜக அரசில் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம், திறன்மேம்பாடு, தொழில்முனைவோர், ஜல்சக்தித்துறை இணை அமைச்சராக சந்திரசேகர் இருந்தார்.

கடந்த 2023ம் ஆண்டு கேரள போலீஸார் ராஜீவ் சந்திரசேகர் மீது, சமூக வலைத்தளங்களில் வகுப்பு வாதங்களை தூண்டிவிடும் வகையில் பதிவுகளை செய்திருந்தார் என்று போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
சந்திரசேகர் தவிர்த்து மாநில பொதுச்செயலாளர் எம்.டி ரமேஷ், துணைத் தலைவர் ஷோபா சுரேந்திரன், முன்னாள் மத்திய அமைச்சர் வி முரளிதரன், மாநில தலைவர் சுரேந்திரன் ஆகியோர் பெயரும் மாநிலத் தலைவர் பெயருக்கு பரிசீலிக்கப்பட்டாலும், பாஜக மேலிடம் மாநிலத் தலைவர் பதவிக்கு ராஜீவ் சந்திரசேகர் பெயரை வலிமையாகப் பரிந்துரைத்ததால் போட்டியின்றி அவரே தேர்வு செய்யப்படுகிறார்.
இதையும் படிங்க: முதியவர்களுக்கு தனி ஆணையம் அமைத்தது கேரளா.. வரலாற்று சாதனை..!