திருவாரூர் அருகே புலிவலத்தைச் சேர்ந்தவர் கார்த்தி வயது 42.இவர் மலர் வியாபாரம் செய்து வருகிறார். இவர் திருவாரூர் வடக்கு வீதியிலுள்ள சத்யா ஏஜென்சிஸ் நிறுவனத்தில் 18.12.2023 அன்று ஒரு லட்சத்து 30 ஆயிரம் மதிப்புள்ள சாம்சங் எல்இடி டிவி வாங்கியுள்ளார். சத்யா ஏஜென்சிஸ் நிறுவனத்தினர் சாம்சங் நிறுவனம் வழங்கும் ஓராண்டு வாரண்டியுடன் கூடுதலாக 3 ஆண்டு வாரன்டி வேண்டுமென்றால் கூடுதலாக ரூபாய் 19,099/- செலுத்தும்படி கேட்டுள்ளனர். மொத்தமாக ரூபாய் 1,49,099/- செலுத்தி டிவியை வாங்கியுள்ளார்.

இந்த நிலையில் 6 மாத காலம் நன்றாக ஓடிய டிவி ஒரு நாள் ஐபிஎல் மேட்ச் பார்ப்பதற்காக டிவியை ஆன் செய்த போது படம் சரியாகத் தெரியாமல் ஒரு பாதியில் மட்டும் கோடுகளாகத் தெரிந்துள்ளது.இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இது பற்றி சத்யா ஏஜென்சிஸ் நிறுவனத்திற்கு டிவியை நேரில் எடுத்துச் சென்று கார்த்தி காட்டியுள்ளார்.அதன்பிறகு மறுநாள் சாம்சங் நிறுவனத்தின் டெக்னீசியன் டிவியை ஆய்வு செய்துள்ளார்.
அதன்பிறகு சத்யா ஏஜென்சிஸ் நிறுவனத்தினர் டிவியின் திரை மீது பந்து போன்ற ஏதோ ஒரு பொருள் பட்டு பலமான அழுத்தம் ஏற்பட்டு அதனால் ஃபிசிக்கல் டேமேஜ் ஏற்பட்டுள்ளதாக டெக்னீசியன் கூறியுள்ளார்,டிவி இயல்பாகப் பழுதாகியிருந்தால் மட்டுமே வாரண்டி கவரேஜ் கிடைக்கும்.இதுபோல் அடிபட்டு அதனால் பழுது ஏற்பட்டிருந்தால் அதற்கு நிறுவனம் பொறுப்பேற்க முடியாது என்று கூறிவிட்டனர்.மேலும் சத்யா ஏஜென்சிஸ் நிறுவனத்தினர் கார்த்தியிடம் டிவியை சரி செய்ய வாய்ப்பில்லை டிவியை எடுத்துச் சொல்லுங்கள் என்று கூறிவிட்டனர்.
இதையும் படிங்க: டி.டி.வி.தினகரனை நெருங்கும் எடப்பாடியார்... அதிமுக மீது நொறுங்கும் பாஜகவின் நம்பிக்கை..!

இதன் காரணமாக மனமுடைந்த கார்த்தி 23.7.2024 அன்று திருவாரூர் நுகர்வோர் நீதிமன்றத்தில் சத்யா ஏஜென்சிஸ் நிறுவனம் மற்றும் சாம்சங் டிவி நிறுவனத்தின் மீது வழக்குத் தொடுத்தார். வழக்கை விசாரித்த திருவாரூர் நுகர்வோர் குறைதீர் ஆணையத் தலைவர் மோகன்தாஸ் மற்றும் உறுப்பினர் பாலு ஆகியோர் இன்று வழங்கிய தீர்ப்பில் டிவி நிறுவன வாரண்ட்டி காலமான ஓராண்டு காலத்திற்குள் பழுது ஏற்பட்டுள்ளது.
மேலும் பந்து பட்டு உடைந்தது என்ற வாதத்தை டிவி நிறுவனம் உரிய எஸ்பெர்ட் ஆய்வு மூலம் நிரூபிக்கவில்லை.எனவே சாம்சங் டிவி நிறுவனம் கார்த்திக்கு 45 நாட்களுக்குள் பழைய டிவியை எடுத்துக்கொண்டு அதே மாடல் புதிய டிவியை வழங்க வேண்டும்,அதே மாடல் டிவி தற்போது இல்லாவிட்டால் டிவியின் விலையான ரூபாய் 1,49,099/-ஐ 45 நாட்களுக்குள் வழங்க வேண்டும்,மேலும் மன உளைச்சல் அலைச்சல் மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுத்தியதற்கு சாம்சங் டிவி நிறுவனம் கார்த்திக்கு நஷ்டஈடாக ரூபாய் ஒரு லட்சம் மற்றும் வழக்குத் செலவு தொகையாக ரூபாய் 10,000/- 45 நாட்களுக்குள் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

இது குறித்து கார்த்தி கூறுகையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு வடக்கு வீதி சத்யா ஏஜென்சிஸ் நிறுவனத்தில் நகையை அடகு வைத்து ரொக்கமாக பணம் கொடுத்து இந்த டிவியை வாங்கினேன்.மேலும் கூடுதல் வாரண்டிக்காக 20000 ரூபாய் கட்ட சொன்னார்கள் அதையும் கட்டி டிவி எடுத்தேன்.டிவி எடுத்து ஆறு மாதத்தில் வெளியில் சென்று விட்டு ஐபிஎல் மேட்ச் பார்ப்பதற்காக வந்து டிவியை ஆன் செய்தபோது டிஸ்ப்ளே போயிருந்தது.
இது குறித்து சத்யா நிறுவனத்தில் கேட்டதற்கு உரிய பதிலளிக்காத காரணத்தினால் வழக்கு தொடர்ந்தேன்.இந்த வழக்கில் இன்று எனக்கு சாதமாக தீர்ப்பு வந்திருப்பது மகிழ்ச்சியிருக்கிறது. இதுபோன்று அனைவரும் போராடி தங்கள் உரிமையை நிலைநாட்ட வேண்டும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வெற்றி பெற வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்
இதையும் படிங்க: அண்ணாமலையை தவிர்த்த நயினார் நாகேந்திரன்... தொண்டர்களுக்கு போட்ட ஸ்ட்ரிக்ட் உத்தரவு...!