சமீபத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தொடுக்கப்பட்டிருந்த பாலியல் வழக்கு விஸ்வரூபம் எடுத்தது. சீமானுக்கு பல நெருக்கடிகள் இருந்த போதிலும் மனம் தளராமல் அதனை சந்தித்தார்.

சீமானுக்கு அனுப்பப்பட்ட சம்மன் விவகாரம் பேசுப் பொருளாக மாறியது. தொடர்ந்து அவர் காவல் நிலையத்தில் ஆஜராகி விளக்கங்களை கொடுத்திருந்தார். பின்னர் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து, இந்த நெருக்கடி அரசியல் காரணங்களுக்காக கொடுக்கப்பட்டது எனக் கூறி வாதிக்கப்பட்டது. சமரசமாக இந்த பிரச்சனையை பேசி முடிக்குமாறும் சீமானிடம் வழக்கு விசாரணையை தொடர்ந்து நடத்தவும் இடைக்கால தடை விதித்தது உச்ச நீதிமன்றம்.
இதையும் படிங்க: திமுக அரசின் நாடகம்... பாஜக எம்.பி-க்களுடன் டீல்: உண்மையை உடைத்த சீமான்..!

திமுக அரசின் அழுத்தத்தால் தான் சீமானுக்கு இவ்வளவு நெருக்கடி கொடுக்கப்படுகிறது என அரசியல் வட்டாரத்தில் பேச்சுக்கள் எழுந்த நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவால் பெருமூச்சு விட்டுள்ளார் சீமான். இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை ஊக்கமளிக்குமாறு பேசி உள்ளார்.

சென்னையில் பாஜக நிர்வாகி காயத்ரி தேவி இல்ல திருமண விழாவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார். அப்போது, சீமானை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்தார்.
காரில் அமர்ந்திருந்த சீமானிடம் கைக்குலுக்கி ஊக்கம் தந்தார் அண்ணாமலை. மேலும் fight பண்ணிக் கொண்டே இருங்க! Strong ah இருங்க அண்ணா என சீமானிடம் அண்ணாமலை தெரிவித்தார்.

சீமானுக்கு அரசியல் காரணங்களால் தான் அழுத்தம் தரப்படுகிறது என்ற பேச்சு அடிப்பட்ட நிலையில், சீமானுக்கு அண்ணாமலை தந்த ஊக்கம் இயல்பானதா அல்லது அரசியல் காரணங்களை மனதில் வைத்து கூறப்பட்டதா என்ற கருத்துக்களும் உலாவி வருகிறது.
இதையும் படிங்க: பி.கே-விடம் ரூ.100 கோடியும் சீமான் கட்சியையும் தருகிறேன்..! விஜய்க்கு எஸ்.வி.சேகர் சவால்..!