அதிமுக - பாஜக கூட்டணி பேச்சுவார்த்தைகள் தொடங்கியதாக தகவல் வெளியானதில் இருந்தே தமிழக அரசியல் களம் பரபரப்பாகிவிட்டது. குறிப்பாக அதிமுகவை தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைத்துக் கொள்வதில் அண்ணாமலைக்கு விரும்பமில்லை என்றும், பாஜகவுடன் மீண்டும் கூட்டணி வைக்க எடப்பாடி தயங்குவதாகவும், செங்கோட்டையனை புதிய அதிமுக பொதுச்செயலாளராக அமரவைத்து கட்சியை கூட்டணிக்குள் கொண்டு பாஜக முயற்சிப்பதாக பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணம் இருக்கின்றன.

இந்த தகவல்களை எல்லாம் செய்திகள் மூலம் அறிந்து கொள்ளும் அதிமுக, பாஜக தொண்டர்கள் ஊர், ஊராக போஸ்டர்களை ஒட்டி அதகளப்படுத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களாகவே எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை ஆதரவாளர்கள் இடையே போஸ்டர் யுத்தம் தீவிரமடைந்து வருகிறது. சிவகங்கையைச் சேர்ந்த அதிமுகவினர், தமிழகத்தில் அதிமுக தான் பெரிய கட்சி, அதிமுக தலைமையில் தான் கூட்டணி, எடப்பாடி யாரை முதல்வராக ஏற்பவர் கள் தான் கூட்டணியில் சேர முடியும் போன்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களை நகரம் முழுவதும் ஒட்டி பரபரப்பைக் கிளப்பியது.
இதையும் படிங்க: நான் எப்படி சும்மா இருக்க முடியும்..? அதிமுக எம்.எல்.ஏ-க்களிடம் செங்கோட்டையன் ஆவேசம்

உடனே பதிலடி தருகிறோம் என்ற பெரியரில் பரமக்குடி பாஜகவினர் களத்தில் இறங்கினர். அதிமுக கூட்டணி வேண்டாம் எனவும், அண்ணாமலை மாநில தலைவராக வேண்டும் எனவும் பாஜக சார்பில் பரமக்குடி முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டப்பட்டன. அதிமுகவுடன் மீண்டும் கூட்டணி அமைக்க பாஜக தலைமை முயற்சித்து வரும் நிலையில், அண்ணாமலை ஆதரவாளர்களின் இந்த செயல் அதிமுகவை வெறுப்படைய வைத்துள்ளது.

இதுபோதாது என்பது போல், எடப்பாடி ஆதரவாளர்களுக்கு போட்டியாக செங்கோட்டையனின் ஆதரவாளர்களும் களத்தில் குதித்துள்ளனர். அதிமுக பொதுச்செயலாளர் செங்கோட்டையன் என மதுரை முழுவதும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் அதிமுகவில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாநகர் மாவட்ட மத்திய தொகுதி அதிமுக செயலாளர் மிசா செந்தில் என்பவரின் பெயரில் நேற்று ஒட்டப்பட்ட போஸ்டர்ககளில் “அதிமுக பொதுச்செயலாளர் கே.ஏ.செங்கோட்டையன் அவர்களுக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்கிய மத்திய அரசுக்கு நன்றி, நன்றி, நன்றி” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: டெல்லியில் செங்கோட்டையன் சந்திப்பு விவகாரம்.. பிரதமர் மோடியை சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி தீவிர முயற்சி..?