தமிழகம் முழுவதும் கொலை, கொள்ளை போன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபடுவர்களை கட்டுப்படுத்தவும் கைது செய்யவும் தமிழக போலீசார் பல்வேறு சீரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் கொலை, கொள்ளை சம்பவங்கள் நடந்து மக்களை அச்சத்தில் ஆழ்த்துவது தொடர்கிறது.
கொலை சம்பவங்கள் குறைவு தான். ஆனால் அவை அதிகம் கவனம் பெறுகின்றன என சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்தார். இந்நிலையில் இதுபோன்ற கொலை, கொள்ளை போன்ற குற்றசம்பவங்கள் அதிகரிக்க காரணமாக போதைப்பொருள் புழக்கம் கூறப்படுகிறது.

போதை பழக்கத்தால் சீரழியும் இளைஞர்கள் சிலர், இது போன்ற தவறான வழிகளை தேர்ந்தெடுத்து தங்களது எதிர்காலத்தை சீர்குலைத்து கொள்கின்ற்னர். பின்னர் போலீசிடம் சிக்கிய பின் இனி இதுபோன்ற தவறுகளை செய்ய மாட்டேன் என வீடியோ வெளியிட்டு மன்னிப்பு கேட்பதும் தொடர்கதை ஆகி வருகின்றனது. இதன் ஒருபகுதியாக சென்னையில் ஒரே நாளில் 8 இடங்களில் செயின் பறிப்பு சம்பவம் நடந்திருப்பது மக்களிடையே பெரும அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. அதிகாலையில் நடந்த இந்த செயின் பறிப்பு சம்பவங்கள் வேலைக்கு செல்லும் பெண்களை கலக்கத்தில் ஆழ்த்தி உள்ளது.
இதையும் படிங்க: கோபாலபுரம் கும்பலின் குண்டர் படை.. சவுக்கு சங்கருக்கு ஆதரவாக கொந்தளிக்கும் ஹெச். ராஜா.!!

சென்னை அடையார் இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் லட்சுமி. வயது 54. இன்று காலை 6 மணி அளவில் கடைக்கு நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது பைக்கில் வந்த மர்ம ஆசாமிகள் லட்சுமியின் 5 பவுன் செயினை பறித்து கொண்டு தப்பினர். அவரது வீட்டின் அருகிலேயே இந்த சம்பவம் அரங்கேறியது.
லட்சுமி கூச்சலிட்டு அக்கம்பக்கத்தினர் வருவதற்குள் அந்த ஆசாமிகள் அங்கிருந்து பைக்கை கிளப்பி பறந்தனர். இதேபோல் சென்னை வேளச்சேரியில் மூன்று இடங்கள், சாஸ்திரி நகர், திருவான்மியூர், பெசன்ட் நகர், கிண்டி, சைதாப்பேட்டை என மொத்தம் 8 இடங்களில் செயின் பறிப்பு சம்பவம் நடந்துள்ளது. இதில் பெரும்பாலானவர்கள் வயதானவர்கள். அனைத்து செயின் பறிப்பு சம்பவங்களும் காலை 6 முதல் 7 மணி என ஒரு மணி நேரத்தில் நடந்துள்ளது.

வேலைக்கு செல்பவர், வாக்கிங் சென்றவர்கள் என மொத்தம் 16 பவுன் அளவில் பெண்களிடம் செயின்கள் பறிக்கப்பட்டு உள்ளது. திருவான்மியூர் இந்திரா நகர் பகுதியில் வேலைக்கு சென்ற பெண்ணிடம் 5 சவரன் நகையும், சாஸ்திரி நகரில் பயிற்சி மேற்கொண்டிருந்த பெண்ணிடம் அரை சவரன் நகையும், கிண்டி எம்.ஆர்.சி. மைதானம் அருகே நடைபயிற்சி மேற்கொண்டிருந்த பெண்ணிடம் 5 சவரன் நகையும், சைதாப்பேட்டையில் வேலைக்கு சென்றுகொண்டிருந்த பெண்ணிடம் 1 சவரன் நகையும், வேளச்சேரியில் ஒரு பெண்ணிடமும், பள்ளிக்கரணையில் ஒரு பெண்ணிடமும் நகை பறிப்பு சம்பவம் நடந்துள்ளது.

அடுத்தடுத்து நடந்த சம்பவங்களை தொடர்ந்து போலீசார் உஷார் படுத்தப்பட்டனர். முதல் கட்டமாக சைதாப்பேட்டையில் செயின் பறிப்பு ஆசாமிகள் தப்பி செல்லும் சிசிடிவி வீடியோவை போலீசார் கைப்பற்றினர். அவர்களின் அடையாளங்களை வைத்து போலீசார் தொடர் விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர். நகை பறிப்பு சம்பவம் தொடர்பாக அனைத்து காவல் நிலையத்திலும் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இவர்கள் ஒரே இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் தான் என விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த கும்பல் பள்ளிக்கரணையில் இருந்து கிளம்பி அடையாறு, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் 1 மணிநேரத்தில் கைவரிசை காட்டிவிட்டு தலைமறைவாகி உள்ளது போலீசாரின் சிசிடிவி காட்சிகள் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இதையும் படிங்க: தொகுதி மறுவரையறை விவகாரம்.. கோடு போட்ட ஸ்டாலின்.. ரோடு போடும் ரேவந்த் ரெட்டி..!!