திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அருகே உள்ள தனியார் பள்ளியில் சக மாணவனை மற்றொரு மாணவன் அரிவாளால் வெட்டியச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அறிவாளால் வெட்டப்பட்ட மாணவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இது குறித்து விரிவான விசாரணை நடைபெற்ற வருவதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து பள்ளி வளாகத்தில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் மேற்கொண்டுள்ளனர்.

ஒரு மாணவர் மற்றொரு மாணவரிடம் பென்சில் கேட்டதாகவும் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த மாணவன் அறிவாளால் தாக்கியதாகவும் கூறப்பட்டுள்ளது. பள்ளி வளாகத்திற்கும் எப்படி அரிவாள் கொண்டு வந்தார் அந்த மாணவர் என்பது அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
மாணவன் வெட்டப்பட்ட சம்பவத்தை அறிந்த பெற்றோர்கள் பள்ளி வளாகத்தை முன்பு குவிந்தனர். தங்களது பிள்ளைகளை காண்பிக்குமாறு பதற்றத்தில் இருந்த பெற்றோருக்கு தங்கள் குழந்தைகள் பாதுகாப்பாக இருப்பதாக பள்ளி நிர்வாகத்தின் சார்பில் குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டது.
இதையும் படிங்க: பென்சிலுக்காக இப்படியா? 8ம் வகுப்பு மாணவனுக்கு அரிவாள் வெட்டு.. பள்ளிக்குள் கொலைவெறி தாக்குதல்..!

இந்த சம்பவம் நெல்லை மாவட்டத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே மாணவர்களின் புத்தகப் பைகளை சோதனை செய்ய வேண்டும் என்று தனியார் பள்ளிகளுக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சுழற்சி முறையில் மாணவர்களின் புத்தகப் பைகளை சோதனை செய்ய வேண்டும் என்று நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: அதிமுக முன்னாள் MLA கருப்புசாமி பாண்டியன் மறைவு !