கிருஷ்ணகிரி அருகே அரசுப்பள்ளி விழாவில் நடைபெற்ற மாணவர்கள் கலை நிகழ்ச்சியில் குறிப்பிட்ட கட்சியின் கொடியுடன் மாணவர்கள் நடனமாடியது அப்பள்ளிக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. போச்சம்பள்ளி அருகே சோமனூரில் இருக்கும் பள்ளியில் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. இதில் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அப்போது நடனமாடிய மாணவர்களை பார்த்தவர்கள் திடுக்கிட்டனர். ஒரு மாணவர் பாமக கட்சி கொடியுடன் நடனமாடினார்.

இது தொடர்பான வீடியோக்களும், புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது. இதற்கு பிற கட்சிகள் கண்டனங்களை தெரிவித்தனர். அரசு பள்ளி விழாவில் எப்படி குறிப்பிட்ட கட்சி கொடியுடன் மாணவர்கள் நடமாட முடியும் என கேட்டனர். இந்த பிரச்சனை பள்ளி கல்வித்துறை வரை சென்றது. இதனால் மாவட்ட முதன்மை கல்வி அலுவர், அப்பள்ளியின் தலைமை ஆசிரிய மற்றும் தமிழாசிரியர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பி வைத்துள்ளார்.
இதையும் படிங்க: இந்தியாவின் அஸ்திவாரமே சனாதன தர்மம் தான்.. துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் அதிரடி..!
அதில் பள்ளி மாணவனை கட்சி கொடியுடன் நடனமாட எப்படி அனுமதித்தீர்கள் என கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.
இதற்கு ஒருவாரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என தலைமை ஆசிரியருக்கும், ஆசிரியருக்கும் சம்மன் அனுப்பபட்டது. அப்படி பள்ளி சார்பில் சரியான விளக்கம் அளிக்கப்படா விட்டால் தொடர்புடைய ஆசிரிய, தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனால் அதிர்ச்சியான ஆசிரியர்கள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர். இதேநேரம் பள்ளி கல்வித்துறை சரியாக செயல்படுவதில்லை என்றும் கருத்து தெரிவித்தனர். இது ஒரு பக்கம் இருக்க மும்மொழி கொள்கையை ஆதரித்து தமிழிசை சௌந்தரராஜன் நடத்திய கையெழுத்து பிரச்சாரத்தில் பங்கேற்க வேண்டும் என பள்ளி மாணவர்களிடம் வலியுறுத்தப்பட்டது.
இதையும் படிங்க: எங்கள் கூப்பிட்டு வச்சி அசிங்கப்படுத்துறீங்களா?... தவெகவினர் இஸ்லாமியர்கள் இடையே கடும் வாக்குவாதம்...!