திருநெல்வேலி சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், வண்ணார்பேட்டை, முருகன்குறிச்சி, திருச்செந்தூர் சாலை வழியாக பாளையங்கோட்டை காந்தி மார்க்கெட் வரை 3 கி.மீ. தொலைவுக்கு நடந்து சென்று, ரோடு ஷோ நடத்தினார். அப்போது சாலையின் இருபுறமும் திரண்டிருந்த மக்களுக்கு கை கொடுத்து மகிழ்ந்தார். அப்போது, ஏராளமானோர் கோரிக்கை மனுக்களை வழங்கினர். பாளையங்கோட்டையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் கட்டப்பட்டுள்ள தினசரி சந்தைக் கட்டிடத்தை முதல்வர் .ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இரவு 8 மணியளவில் பாளையங்கோட்டை நூற்றாண்டு மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 1,000-க்கும் மேற்பட்ட மாற்றுக் கட்சியினர் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், "பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து விலகி, திமுகவில் இணைந்திருப்போரை வரவேற்கிறேன். திமுக ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களுக்காகப் பணியாற்றும் கட்சி. திமுகவை அண்ணா தொடங்கியபோதே இதை உறுதிபடத் தெரிவித்திருக்கிறார். திமுக தொடங்கியபோது தேர்தலில் போட்டியிட வேண்டுமா, வேண்டாமா என்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
ஆனால், தற்போது சிலர் கட்சி தொடங்கியதுமே ஆட்சிக்கு வந்துவிடுவோம் என்கிறார்கள். முதல்வராவோம் என்று தெரிவிக்கிறார்கள்.
இதெல்லாம் மக்களிடம் எடுபடாது. யார் எப்படிப்பட்டவர்கள் என்பது மக்களுக்கு நன்றாகத் தெரியும். தேர்தலில் நிற்க வேண்டும் என்று முடிவெடுத்து 1957 தேர்தலில் திமுக போட்டியிட்டபோது 15 எம்எல்ஏக்கள் கிடைத்தனர். இப்படி படிப்படியாக வளர்ந்து 6-வது முறையாக ஆட்சியில் இருக்கிறோம். 2026 தேர்தலில் 7-வது முறை வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைக்கும்." என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
இதையும் படிங்க: திருப்பரங்குன்றத்தில் அயோத்தி யுத்தம்.. தாலிபன் திமுக அரசு.. கோபத்தில் கொந்தளித்த எச். ராஜா..!
இதையும் படிங்க: உங்கள் நாடகங்கள் விரைவில் அம்பலமாகும்... திருப்பரங்குன்றம் விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலினை வறுத்தெடுக்கும் மத்திய இணையமைச்சர் எல். முருகன்.!