தேசிய கல்விக் கொள்கையைத் தமிழக அரசு ஏற்றுக் கொண்டால் மட்டுமே நிதி என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியது தமிழக அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விஷயத்தில் திமுகவும் பாஜகவும் கடுமையாக மோதிக் கொள்கின்றன. சமூக வலைதளங்களில் திமுகவினரும் பாஜகவினரும் 'கெட் அவுட்' வார்த்தையை டிரெண்டிங் செய்து கடுமையாக மோதிக்கொண்டனர். என்றாலும், தேசிய கல்வி கொள்கை, இந்தி திணிப்பு, மும்மொழி கொள்கை வைத்து இரு கட்சியினரும் இன்னும் சமூக வலைதளங்களில் நிறுத்திக் கொள்ளவில்லை. அதேபோல திமுகவின் நடவடிக்கைகளை விமர்சித்து பாஜக தலைவர்களும், பாஜகவின் நடவடிக்கைகளை திமுக தலைவர்களும் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா சமூக வலைதள பக்கத்தில் தகவல் ஒன்றைப் பதிவு செய்தார். அதில், "எது சரி? எது தவறு? என்று தமிழக மக்கள் எந்த ஒரு விஷயத்திலும் ஒரு தீர்மானத்திற்கு எளிதில் வர வேண்டும் என்றால் அதற்கு என்ன தீர்வு என்பதற்கு ஒரே விடை இதுதான். திமுகவும், காங்கிரஸூம் அதன் தோழமை கட்சிகளும் ஒரு சட்டத்தையோ அல்லது திட்டத்தையோ மத்திய அரசு அமல்படுத்தும் போது அதற்கு மிக தீவிரமாக எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்றால் அந்த சட்டமோ அல்லது திட்டமோ நிச்சயம் நமது வருங்கால சந்ததிகளுக்கும், இந்த தேசத்திற்கும் வளர்ச்சியையும், பாதுகாப்பையும் அளிக்கக்கூடியது என்று புரிந்துகொண்டு அதை மக்கள் முழுமையாக ஆதரிக்கலாம்..!!

திமுகவும், காங்கிரஸூம் அதன் தோழமை கட்சிகளும் எந்த ஒரு திட்டத்தையோ, அல்லது சட்டத்தையோ, விஷயத்தையோ தொடர்ந்து தீவிரமாக ஆதரிக்கிறார்களோ, தொடர்ந்து பிரச்சாரம் செய்கிறார்களோ, அதை செயல்படுத்தத் துடிக்கிறார்களோ நிச்சயமாக அந்த சட்டமோ அல்லது திட்டமோ, அந்த விஷயமோ நமது வருங்கால சந்ததிகளுக்கும் இந்த தேசத்திற்கும் நிச்சயமாக அச்சுறுத்தலையும், ஆபத்தையும், இழப்பையும் ஏற்படுத்தும் என முடிவு செய்து மக்கள் அனைவரும் அதை உறுதியாக நிராகரிக்கலாம்..!!
இதையும் படிங்க: 26ஆம் தேதி அமித்ஷா, அண்ணாமலை சந்திப்பு..! கோவையில் முக்கிய ஆலோசனை..!
தமிழகத்தில் திமுகவும், காங்கிரஸூம் அதன் கூட்டணி கட்சிகளும் ஒரு விஷயத்தையோ, திட்டத்தையோ ஆதரிப்பதும், எதிர்ப்பதும் தேசத்தின் எதிர்கால நலன் கருதியோ அல்லது மக்களின் நலன் கருதியோ அல்ல! வாக்கு வங்கி அரசியலுக்காகவும் தங்களின் சுயநலத்திற்காகவும் தான்..!!" என்று ஹெச். ராஜா தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதி மிரட்டல்... மத்திய அமைச்சர் மீது திமுக பகீர் குற்றச்சாட்டு.!