குளித்தலை அருகே அண்ணாவி பூசாரிப்பட்டியில் கூட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பத்தாம் வகுப்பு மாணவி கூச்சலிட்டதால் கழுத்தறுக்கப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே அண்ணாவி பூசாரிபட்டியை சேர்ந்தவர் 15 வயது மாணவி ஒருவர், தரகம்பட்டியில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.
இவருக்கு அதேபகுதியைச் 12ம் வகுப்பு படிக்கும் மாணவனுடன் பழக்கம் இருந்துள்ளது. இருவரும் செல்போனில் பேசி பழகி வந்துள்ளனர். நேற்று விடுமுறை என்பதால் மாணவி வீட்டில் இருந்துள்ளார். அப்போது இரவு மாணவியை போனில் தொடர்பு கொண்ட 12ம் வகுப்பு மாணவன் வீட்டிற்கு அருகேயுள்ள சோளக்காட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார்.
இதையும் படிங்க: அடுத்தடுத்து 7 மாணவிகள்... சைல்டு லைனுக்கு பறந்த போன் கால்... 58 வயது சபல ஆசிரியரை தட்டித்தூக்கிய போலீஸ்...!

இப்போது அந்த மாணவி மறக்கவே அவருக்கு பரிசு வாங்கி வைத்திருப்பதாகவும் அதனை வாங்கிக் கொள்ளவா என ஆசை வார்த்தை கூறி அழைத்துள்ளார். இதனை நம்பிச் சென்ற மாணவியை 12 ஆம் வகுப்பு மாணவன் மற்றும் அங்கிருந்த மற்ற இரண்டு இளைஞர்கள் சேர்ந்து மாணவியை கூட்டு பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளனர்.
இதனால் பயந்து போன மாணவி கூச்சலிட்டுள்ளார். அவரது கூச்சல் கேட்டு அருகில் இருந்து வந்தால் தாங்கள் மாட்டிக் கொள்வோம் என அவர்கள் மூன்று பேரும் சேர்ந்து மறைத்து வைத்திருந்த கத்தியால் கழுத்தை அறுத்துள்ளனர்.

அப்போது அவர் அபாய குரல் எழுப்பவே சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் வருவதைக் கண்டு மூன்று பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.கழுத்தில் படுகாயம் உடன் இருந்த மாணவி மீட்ட பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அங்கு மாணவி அவசர சிகிச்சை பிரிவு தற்போது சிகிச்சையில் உள்ளார். இது குறித்து தகவல் அறிந்த பாலவிடுதி போலீசார் 12ஆம் வகுப்பு மாணவனை பிடித்து விசாரித்து வருகின்றனர். மேலும் தப்பியுடைய இரண்டு பேரையும் வலை வீசி தேடி வருகின்றனர்.

பரிசளிப்பதாக ஆசை வார்த்தை கூறி பத்தாம் வகுப்பு மாணவியை மூன்று பேர் கூட்டு பாலியல் துன்புறுத்தல் செய்து கழுத்தை அறுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கையை கடித்தும் பெண் காவலரை விடாத காமூகன்... தர்ம அடி கொடுத்த மக்கள்... கண்டித்த பாஜக அண்ணாமலை!