கல்லூரிக்கு செல்லும் பிள்ளைகளுக்கு சமைக்க வேண்டும் என அடுப்படியில் வேலை செய்து கொண்டிருந்தபோது குக்கர் வெடித்து பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்துகிறது
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வ.உ.சி நகரை சேர்ந்தவர் குருசாமி . இவரது மனைவி சாந்தி இந்த தம்பதிக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். இருவரும் கல்லூரியில் படித்து வருகின்றனர் வழக்கம்போல் பிள்ளைகளுக்கு காலையில் கல்லூரிக்கு மதிய உணவு கட்டிக் கொடுப்பதற்காக சமையல் செய்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக குக்கர்வெடித்து சிதறியதில் சாந்தி படுகாயம் அடைந்தார்
உடனடியாக அவரது கணவர் குருசாமி மனைவியை கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சாந்தி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்
இது குறித்து தகவல் கிடைத்ததும் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் ஆசை ஆசையாய் பிள்ளைகளுக்கு சமைத்துக் கொண்டிருந்தபோது குக்கர் வெடித்து பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது
இதையும் படிங்க: சென்னையில் போலீசில் தன்னை போட்டுக்கொடுத்த காதலியை கார் ஏற்றி கொலை செய்ய முயன்ற EX காதலன்
இதையும் படிங்க: யார் அந்த சார்..? மாணவியின் தோழியிடமும் ஞானசேகரன் பாலியல் சீண்டல்... செல்போனில் சிக்கிய ஆபாச வீடியோக்கள்..!