அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டனில் உள்ள குப்பைகளையும், குண்டும் குழி சாலைகளையும், சுவற்றில் எழுதப்பட்ட தேவையற்ற வரைபடங்கள், எழுத்துகக்ளையும் பார்க்க பிரதமர் மோடியும், உலகத் தலைவர்களும் விரும்பவில்லை என்று அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வாஷிங்டனை சுத்தம் செய்யுங்கள் என்று மக்களுக்கு அதிபர் ட்ரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.

வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகை அருகே சுத்தமில்லாத பகுதிகளையும், சுவற்றில் எழுதப்பட்டுள்ள வரைபடங்கள், குடில்களும் தலைநகரின் அழகைக் கெடுக்கின்றன, சுத்தமில்லாத சூழலை உருவாக்குகின்றன என்ற புகார் எழுந்தது.
இதையும் படிங்க: #BIGBREAKING: வழிக்கு வந்த புடின்..! மோடிக்கு நன்றி.. முடிவுக்கு வருகிறது உக்ரைன் போர்..
இதையடுத்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் ஊடகங்களுக்கு நேற்று பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
நாம் நம்முடைய வாஷிங்டன் நகரை சுத்தம் செய்ய வேண்டும். நாம் ஏதும் தவறு செய்யவில்லை, பெரிய குற்றச்செயலுக்கு ஆதரவாகவும் செல்லவில்லை, மாபெரும் தலைநகரை நாம் சுத்தம் செய்ய இருக்கிறோம். தலைநகரில் வெள்ளை மாளிகைக்கு அருகே இருக்கும் சுவற்றில் தேவையற்ற வரைபடங்கள், எழுத்தக்களை அழிக்கப் போகிறோம். திறந்தவெளிப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த டெண்ட்களை ஏற்கெனவே அகற்றிவிட்டோம், அரசுநிர்வாகத்தோடு தொடர்ந்து ஒத்துழைத்து செயல்படுங்கள்.

வாஷிங்டன டிசி மேயர் முரியல் போஸர் நகரை சுத்தம் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார், அவரின் பணி சிறப்பாக இருக்கிறது. வெள்ளை மாளிகைக்கு நேர் எதிராக சிலர் டெண்ட் அமைத்துள்ளனர், அது அகற்றப்பட வேண்டும், வேறு ஏதாவது இடத்தில் அமைக்கலாம். உலகளவில் நமது தலைநகரின் சுத்தம் பற்றி, அழகு பற்றி பேச வேண்டும்.
இந்தியாவின் பிரதமர் மோடி, பிரான்ஸ் அதிபர், பிரிட்டன் பிரதமர் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் வாஷிங்டனுக்கு கடந்த வாரம் என்னைச் சந்திக்க வந்திருந்தார்கள். அவர்கள் வந்திருந்தபோது, அவர்கள் இங்கிருந்த டெண்ட்களை பார்க்கவிரும்பவில்லை, சுவற்றில் எழுதப்பட்டிருந்த வாசகங்களையும் பார்க்க விரும்பவில்லை, சாலையில் இருக்கும் குண்டும், குழிகளையும் அவர்கள் விரும்பவில்லை, தடைகளையும் விரும்பவில்லை. நாம் நகரை அழகாக மாற்ற வேண்டும்.

தலைநகரை அழகாக மாற்ற நாம் ஏதாவது செய்ய வேண்டும், இங்கு குற்றமே இல்லாத சூழலையும் உருவாக்க வேண்டும். வாஷிங்டன் நகருக்கு வரும் மக்களுக்கு எந்தத் தொந்தரவும் இருக்கக்கூடாது, எந்த பெண்ணும் பலாத்காரத்துக்கு ஆளாகக் கூடாது. குற்றச் செயல்கள் இல்லாத தலைநகராக வாஷிங்டன் இருக்க வேண்டும். நகரும் சுத்தமாக, பாதுகாப்பானதாக மாற்றப்பட வேண்டும்.
இவ்வாறு அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார்.
கடந்த மாதம் 13ம் தேதி வாஷிங்டன் சென்றிருந்த பிரதமர் மோடி, அதிபர் ட்ரம்பை சந்தித்துப் பேசினார். 2வது முறை அதிபராக ட்ரம்ப் பொறுப்பேற்றபின், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, ஜப்பான் பிரதமர் சிகேரு இஷிபா, ஜோர்டான் மன்னர் 2ம் அப்துல்லா ஆகியோர் சந்தித்துச் சென்றுள்ளனர்.
இதையும் படிங்க: #BREAKING: டிரம்பின் மிரட்டலுக்குப் பணிந்தார் ஜெலன்ஸ்கி..! 30 நாட்களுக்கு போர் நிறுத்தம்