விஜய் பொதுவாக பனையூர் பங்களாவை விட்டு வெளியே வருவதே இல்லை. மழைக்காலங்களி நேரடியாக சென்று மக்களை சந்திக்கவில்லை. தவெக மாநாட்டில் நிர்வாகிகள் இறந்த போது அதற்கு விஜய் இரங்கல் அறிக்கையையே தாமதமாக வெளியிட்டார். அவர்களின் குடும்பத்தாரை நேரில் கூட சென்று சந்திக்கவில்லை. அவர்களையும் கூட பனையூருக்கு அழைத்து நிவாரணம் கொடுத்தார்.
வெள்ள நிவாரண உதவிகளையும் பனையூருக்கு அழைத்தே கொடுத்தார். நேற்று பெரியார் நினைவு நாளுக்கு வெளியே சென்று மாலை போடவில்லை. எல்லாமே பனையூர் பங்களாவில் உள்ள வீட்டில் மாலை போடுவதோடு விஜய் நிறுத்திக்கொள்கிறார்.
இந்நிலையில், மீண்டும் அதே இடம், அதே சுவர் அதே டேபிளில் வீரமங்கை வேலுநாட்சியார் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்ததை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார் விஜய். அதில், ‘‘மண்ணைக் காக்க வாளேந்திப் போர்க்களம் புகுந்த வீரப் புரட்சியாளர், இந்தியாவின் முதல் விடுதலைப் பெண் போராளி, அனைத்துச் சமூகத்தினரோடும் நல்லிணக்கத்தோடு நாடாண்ட தமிழச்சி, எம் கழகத்தின் கொள்கைத் தலைவர், வீரமங்கை, ராணி வேலு நாச்சியார் அவர்களின் நினைவு தினத்தையொட்டி, எமது அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினேன்’’ எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கட்சி தொடங்கியதையே மறந்து போனாரா விஜய்..? எதிரணிகள் கலாய்ப்பு... தவெக சிலாகிப்பு..!
இதற்கு கடும் விமர்சனங்களை தெரிவித்து வருகிறார்கள் நெட்டிசன்கள். ‘‘அதே இடம்... அதே செவுரு... அதே டேபில். வேற வேற ஃபோட்டாவும்... வேற வேற கொள்கை தலைவர்களும் தான் தினமும் மாறிக்கொண்டே இருக்கிறார்கள். ஒரு க்ரீன் ஸ்கிரீன் ரெடி பண்ணிக் கொள்ளுங்கள். அடிக்கடி டேபிளை தூக்கி வைக்கத் தேவை இருக்காது.
எல்லா தலைவர்களோட போட்டோக்களையும் ஃப்ரேம் போட்டு வைத்திருப்பார் போல. வீட்டு உள்ளயே ஒரு 100 மாலை ஒன்னு வாங்கி போட்டுக் கொள்கிறார் விஜய்’’ என்கிறார்கள்.
‘‘அரசியலே படம் ஷூட்டிங் மாதிரின்னு நினைச்சிட்டு இருக்கார் போல.
இதுக்கு பருத்தி மூட்ட குடோன்லயே இருந்து இருக்கலாம். அந்த போட்டோ ஷூட்டிங்கையாவது பொது மக்கள் கலந்துக்கொள்கிற மாதிரி பொது நிகழ்வாக நடத்தி இருக்கலாம். ஒரே நாள் கால்ஷீட்ல எல்லா படத்துக்கும் மாலை போட்ட போட்டோ தான் வெளிய வருது’’ எனவும் கலாய்த்து வருகிறார்கள்.
‘‘தலைவா கொஞ்சம் அரசியலை உற்று நோக்குங்கள் நேரம் ரொம்ப குறைவாக இருக்கு. மறைந்த ஒவ்வொரு போராளிக்கும் ஒரு மலர் மாலையும், வாழ்த்து செய்தியும்... சீமான் ஃபார்முலா... ஆனால் செயல்முறைதான் வேறு வகை. அதே டெய்லர் அதே வாடகை. நேற்று பெரியாருக்கு தனது பனையூர் ஆபீஸில் மரியாதை செய்து விஜய் வெளியிட்ட ட்வீட் மதியம் 12 மணிக்கு வந்தது.
இன்று வேலுநாச்சியாருக்கு அஞ்சலி செலுத்திய ட்வீட்டும் மதியம் 12 மணிக்கு வந்துள்ளது. ஆகவே இது இரண்டும் செட்டியூல் செய்யப்பட்ட ட்வீட் என்பது தெரிகிறது’’ எனவும் அலசி ஆராய்ந்து பதிவிட்டு வருகின்றனர்.
‘‘நீங்கள் அரசியலில் இருக்கிறீர்கள். ஒரு சுவற்றுக்குள் இருக்க ஹீரோ கிடையாது. மக்கள் தலைவராக இருக்க மக்களை சந்திக்க வேண்டும். பனையூர் பங்களாவை தாண்டி வெளியே வாங்க அதுதான் முக்கியம். மக்களை அடிக்கடி சந்தியுங்கள். முக்கியமாக பத்திரிகையாளர்களை சந்தியுங்கள். உங்களின் நிலைப்பாடுகளை அறிவியுங்கள். இல்லையென்றால் மக்களிடம் சென்று சேருவது எளிதாக இருக்காது’’ என்று விஜய்க்கு பலர் அறிவுறுத்தி வந்தாலும் அதையெல்லாம் சட்டை செய்வதே இல்லை விஜய்.
இதையும் படிங்க: இந்தியாவின் இணையற்ற அரசியல் மதியூகி... கடைசி வரை சிறந்த மனைவியைத் தேடிக் கொண்டிருந்த வாஜ்பாய்..!