பிற்படுத்தப்பட்ட மக்கள் பட்டினலின மக்கள் ஆலயத்திற்கு உள்ளே சென்று கடவுளை வழிபடுகிறார்கள் என்றால் அந்த கெட் பாஸ் கொடுத்தது பெரியார் தான் என உணர்ச்சி பொங்க பேசியுள்ளார் துரை.வைகோ
தந்தை பெரியாரின் 51வது நினைவு நாளை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தந்தை பெரியார் சிலைக்கு
திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை.வைகோ மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த துரை வைகோ , பெரியார் இல்லை என்றால் தமிழகத்தில் பெண்கள் முன்னேற்றம் இருப்பதற்கு வாய்ப்பே இல்லை, பிற்படுத்தப்பட்ட மக்கள் பட்டினலின மக்கள் ஆலயத்திற்கு உள்ளே சென்று கடவுளை வழிபடுகிறார்கள் என்றால் அந்த கெட் பாஸ் கொடுத்தது பெரியார் தான். எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு ,எனவே தான் 4வருடத்திற்கு முன்னே பெரியாரும் வேண்டும், பெருமாளும் வேண்டும் என்ற கருத்தை நான் முன் வைத்தேன் காரணம் கடவுளை வழிபடுபவர்கள் கூட பெரியாரை போற்றுகிறார்கள் என்றார்
தொடர்ந்து பேசிய துரைவைகோ திமுக கூட்டணி, 200 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறிய கருத்து சரியானது.
ஏனென்றால் மக்கள் திமுக பக்கம் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையில் அவர் தெரிவித்திருக்கிறார். 200 தொகுதிகளில் டெபாசிட் இழக்கும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறியது, அவரது கட்சிக்காக இருக்கும். அதிகாரியாக இருந்தவர் பொய் சொல்ல மாட்டார் எனவும் விமர்சனம் செய்தார் துரை.வைகோ
இதையும் படிங்க: ‘பேச்சுதான் காமெடி... வீச்செல்லாம் டெர்ரர்ர்ர்...’: உறுத்தல் ‘உதயகுமார்’... ரவுசு ‘ராஜூ’... சூடேறும் ரத்தத்தின் ரத்தங்கள்..!
இதையும் படிங்க: நாகர்கோவில் காசியை மிஞ்சிய மயிலாடுதுறை மன்மதன்... கல்யாணமான பெண்களே டார்க்கெட்... லிஸ்டில் 10 பெண்கள்..!