வேலூரில் ஓடும் ரயிலில் இளம்பெண்ணுக்கு பாலியல் சம்பவமானது நிகழ்ந்திருக்கிறது பெண் சத்தமிட்டதால் அவரைத் தள்ளிவிட்டதாக தெரிவித்திருக்கிறார். தன்னை தரத்தரவென்று இழுத்து சென்று தாக்கியதாகவும் கர்ப்பிணி தெரிவித்திருக்கிறார்.
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த நாலு மாத கர்ப்பிணி பெண் ஒருவர் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனி ஒன்றில் டைலராக பணியாற்றி வரும் நிலையில், நேற்று தனது சொந்த ஊரான சித்தூருக்கு செல்வதற்குகோயம்புத்தூர் டு திருப்பதி செல்லும் இண்டர் சிட்டி விரைவு ரயிலில் பெண்கள் பெட்டியில பயணம் செய்திருக்கிறார். ரயிலானது ஜோலார்ப்பேட்டை ரயில் நிலையத்தில் சிறிது நேரம் நின்று விட்டு புறப்பட தயாரான போது, அவசர அவசரமாக பெண்கள் பெட்டியில் ஏறி ஹேமராஜ் என்ற நபர் கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார்.

கழிவறைக்குச் செல்லும் போது தொடர்ந்து சென்று அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். அப்போது கர்ப்பிணி பெண் கூச்சலிட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஹேமராஜ், கர்ப்பிணி என்றும் பாராமல் அந்த பெண்ணை ரயிலில் இருந்து தள்ளிவிட்டுள்ளார். இதனால் கை, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாதிக்கப்பட்ட பெண், ரயிலில் நடந்தது என்னவென காவல்துறையினருக்கு வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதையும் படிங்க: ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை...! கைதான ‘சைக்கோ நபர்’ குறித்து வெளியான பகீர் தகவல்...!

அதில், அந்த நபர் முதலில் அரை மணி நேரம் அமைதியாக இருந்தார். பின்னர் எனது ஆடைகளை பிடித்து இழுத்ததால் நான் கூச்சலிட்டேன். என்னை அடித்து கீழே தள்ளி தரதரவென பெட்டியிலே இழுத்துச் சென்று என்னை வெளியே தள்ளிவிட்டான். நான் கீழே விழுந்த பிறகு நான் சுய நினைவை இழந்துவிட்டேன். பின்பு என்னை 108 ஆம்புலன்சில் அழைத்து அந்த வேலூர் அடுக்கும்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள் என்றார்.
மேலும் இது போன்ற சைக்கோ குற்றவாளிகளை தயவுசெய்து யாரும் இவரை வெளியே நடமாட விட வேண்டாம். ஏற்கனவே இரண்டு பெண்களுக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். நான் மூன்றாவதாக பாலியல் தொல்லை அனுபவித்திருக்கிறேன். இதுபோன்ற ஆட்களால் நான்கவதாக ஒரு பெண் பாதிக்கப்படக்கூடாது. ஆகவே அவனை தயவுசெய்து அவனை வெளியில் விட வேண்டாம். அவன் வந்து ஒரு சைக்கோ.

தற்போது ஹேமராஜை ரயில்வே போலீசார் கைது செய்திருக்கும் நிலையில், அவனை வெளியே வர முடியாத அளவிற்கு கடுமையான தண்டனை தர வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இதுபோன்ற அசம்பாவிதங்களைத் தவிர்க்க பெண்களுக்கான பெட்டிகளை பிற பெட்டிகளுக்கு இடையே இணைக்க வேண்டும் என்றும், பெண்களுக்கான பிரத்யேக பெட்டியை கடைசியாக இணைப்பது இதுபோன்ற பாலியல் குற்றவாளிகளுக்கு எளிதானதாக அமைவதாகவும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: ஓடும் ரயிலில் கர்ப்பிணி பெண்ணிற்கு பாலியல் தொல்லை ... கீழே தள்ளிவிட்டு தப்பிய இருவருக்கு வலைவீச்சு ...!