காளியம்மாளை சீமான் தொடர்ந்து ஓரங்கட்டி வருவதால் அப்செட்டில் இருக்கும் காளியம்மாள் கட்சி தாவ ரெடியாகிவிட்டதாக பேசப்பட்டு வந்தது தற்போது நிகழ்ச்சி ஒன்றின் அழைப்பிதலில் நாம் தமிழரின் அடையாளமே இல்லாமல் காளியம்மாள் பெயர் இருப்பதால் அவர் கட்சியை விட்டு விலகிவிட்டாரா என்ற கேள்வி வந்துள்ளது.
நாம் தமிழர் கட்சியின் முக்கிய பெண்ணாளுமைகளில் ஒருவரான காளியம்மாளை சீமான் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை என்றும் சில மாதங்களாக அவரை ஓரம் கட்டி வந்ததாகவும் விமர்சனம் வலம் வருகிறது. காளியம்மாளும் கட்சி நிகழ்ச்சிகளில் தலைகாட்டாமல் ஒதுங்கியே இருக்கிறார். இந்நிலையில் திருச்செந்தூர் அருகில் உள்ள மணப்பாடு பஞ்சாயத்து தலைவரின் இல்ல நிகழ்ச்சி அழைப்பிதலில் காளியம்மாள் பெயர் சமூக செயற்பாட்டாளர் என குறிப்பிடப்பட்டுள்ளது விவாதத்தை கிளப்பியுள்ளது.
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ளும் நிகழ்வில் காளியம்மாள் பெயர் மட்டுமே உள்ளது. கட்சி அடையாளம் இல்லாமல் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை பார்க்கும்போது அவர் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகிவிட்டாரா என்று கேள்வி வருகிறது. சீமானுக்கும் காளியம்மாளுக்கும் இடையே மோதல் முற்றிய நிலையில் அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக சொல்கின்றனர்.
இதையும் படிங்க: வேங்கையன் ஒத்தையில தான் வருவான்...! எவ்வளவு பேர் விலகினாலும் கெத்து காட்டும் சீமான்..!

அவர் திமுக அல்லது தவெக பக்கம் செல்வதற்கான வாய்ப்பு இருப்பதாகவும், அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.தற்போது திமுகவினர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் அதோடு சேர்த்து காளியம்மாள் பெயரும் இடம்பெற்றுள்ளதால் அவர் திமுகவுக்கு செல்கிறாரா என சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது. கடந்த நவம்பர் மாதம் நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய காளியம்மாள் சீமான் பிரபாகரனை சந்தித்து 10 நிமிடங்கள் பேசினார் என சொன்னார் பிரபாகரனை அவர் சந்தித்த சில நிமிடங்கள் மட்டுமே என்றும் பிரபாகரன் இவரிடம் ஏதும் பெரிதாக ஆலோசிக்கவில்லை என்றும் சில அரசியல் தலைவர்கள் சீமானை விமர்சிப்பதுண்டு.

காளியம்மாளும் இதைச் சொன்னதும் கடுப்பான சீமான் மேடையிலேயே வைத்து எல்லோரும் எட்டு நிமிடங்கள் என சொல்வார்கள் காளியம்மாள் 10 நிமிடங்கள் என சொல்லியிருக்கிறார் என அதிருப்தியை காட்டும் வகையில் பேசினார். அதேபோல் ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளர் சீதாலட்சுமியிடம் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. அதில் காளியம்மாள் மாதிரியான முக்கிய முகங்கள் பிரச்சாரத்திற்கு ஏன் வரவில்லை என கேட்டதற்கு மீடியாவில்தான் அவங்க
முக்கியமான முகம் ஆனால் களத்தில் அவரை விட கட்சிக்காக சிறப்பாக செயல்படுபவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் என சொல்லி ட்விஸ்ட் கொடுத்தார். ஆனால் இந்த விவகாரங்களில் காளியம்மாள் எந்த பதிலும் சொல்லாமல் சைலெண்ட் மூடியிலேயே இருக்கிறார் தற்போது இந்த அழைப்பிதல் விவகாரமும் நாம் தமிழர் தொண்டர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
இதையும் படிங்க: அண்ணாமலைக்கு சப்போர்ட்... திமுகவுக்கு எதிராக சீமான் சொன்ன அந்த வார்த்தை...!