ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் கழிவறைக்கு சென்றிருந்த தற்காலிக பணியாளர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் சூரம்பட்டி பகுதியை சேர்ந்த சங்கீதா தற்காலிக பணியாளராக வேலை செய்து வந்தார் . கடந்த ஒரு வார காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாக கூறப்படும் நிலையில் இன்று பணிக்கு வந்த அவர் பணி செய்து கொண்டிருக்கும் பொழுது கழிவறைக்கு சென்றுள்ளார் .

கழிவறைக்கு சென்று வெகு நேரம் ஆகியும் திரும்பி வரவில்லை என சக ஊழியர்கள் கழிவறைக்குச் சென்று பார்த்த போது அங்கு சங்கீதா மயங்கி விழுந்து கிடந்துள்ளார். அவரை மீட்டு ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மருத்துவர்கள் பரிசோதித்த போது ஏற்கனவே சங்கீதா உயிரிழந்தது தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: ஈரோடு அருகே ரவுடி ஜான் வெட்டி கொலை.. முன்விரோதம் காரணமாக வெறிச்செயல்.. தப்ப முயன்றவர்களை சுட்டுப்பிடித்த போலீஸ்..!

தற்போது தற்காலிக பணியாளர் சங்கீதாவின் இறப்பு மாநகராட்சியில் பரபரப்பு ஏற்படுத்தியதுடன் சக பணியாளர்களிடையே பெரும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: தினமும் காதல் கணவன் டார்ச்சர்... கொலையில் முடிந்த மனைவியின் தற்கொலை!!