டாஸ்மார்க்கில் ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் என்று கூறி பாஜக போராட்டம் அறிவித்திருந்தது. இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டார். 7 மணிக்கு அவர் விடுவிக்கப்பட்ட நிலையில், போலீசாரால் தான் 3 முக்கிய விமானங்களை தவறவிட்டுள்ளதாக கடுப்புடன் அவர் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ வைரலாகி வருகிறது.

உங்களுக்கு சொல்லி கொடுத்தேன். நான் மூணு பிளைட்ட விட்டுருக்கேன். ஒரு முக்கியமான கட்சி மூணு பிளைட்ட விட்டுருக்கேன். உங்களுக்கு ஒரு ஆப்ஷன் கொடுத்தேன். என் கூட போலீஸ் ஏர்போர்ட் வரைக்கும் வரட்டுன்னு சொன்னேன். என் பொறுமையை சோதிக்காதீங்க சார். போலீஸ்க்கு மரியாதை கொடுக்கிற அரசியல்வாதி? என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதையும் படிங்க: நான் என்ன விஜய்யை போல் நடிகையின் இடுப்பை கிள்ளியா அரசியல் செய்கிறேன்..? அண்ணாமலை ஆவேசம்..!

தமிழ்நாட்டில் ₹1000 கோடி ரூபாய் டாஸ்மார்க்கில் மதுபான ஊழல் நடந்திருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்த நிலையில் பாஜகவினர் இன்று போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனர். போராட்டம் நடத்துவதற்கு முன்னதாகவே பாஜக மாநில முன்னணி தலைவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில்பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தனது வீட்டிலிருந்து போராட்ட களத்திற்கு வருவதற்கு முன்னதாகவே கைது செய்து அவர் வீட்டு அருகே இருக்கக்கூடிய அக்கரை தனியார் மண்டபத்திலே அடைத்து வைத்திருந்தனர். காலை 11 மணிக்கு சரியாக அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

தற்போது 6 மணிக்கு அவர் விடுவிக்கப்பட்டிருக்க வேண்டும். அவரோடு ஏறத்தாழ 50க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கைது செய்து அடைக்கப்பட்டிருந்தனர். சரியாக 6 மணிக்கு போலீசாரிடம் எங்களை விடுவியுங்கள், எனக்கு கட்சி நிகழ்ச்சி இருக்கிறது என்று அவர் கேட்டதாகவும் அதற்கு போலீசார் மறுப்பு தெரிவித்ததாகவும் காணொளி ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. அப்பொழுது போலீசாருடன் உரையாடும் பொழுது டாஸ்மாக் அலுவலகத்தையே மூடிய பிறகு, அதாவது ஐந்து ஐந்தரை மணி அளவுக்கு டாஸ்மாக் அலுவலகமே மூடிய பிறகு எங்களால் இனி என்ன நடக்கவிருக்கிறது.

ஏனென்றால் டாஸ்மாக் அலுவலகத்தை தான் நாங்கள் முற்றுகையிடுவதாக அறிவித்திருந்தோம். அதற்கு முற்பட்டோம், தற்போது அந்த அலுவலகமே மூடிய பிறகு எங்களை ஏன் இன்னும் விடுவிக்கவில்லை. 6 மணிக்கு எல்லாம் சரியாக எங்களை விடுவித்திருக்க வேண்டும். எனக்கு முக்கிய கட்சி நிகழ்ச்சி இருக்கிறது. ஆனால் உங்களால் நான் மூன்று விமானத்தை தவற விட்டு இருக்கிறேன் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்பொழுது என் பொறுமையை சோதிக்காதீர்கள் என்று எச்சரித்துவிட்டு அண்ணாமலை சென்றிருக்கக்கூடிய காணொளியானது வெளியாகி வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: சூடுபிடிக்கும் டாஸ்மாக் ஊழல் விவகாரம்… ஏன் பயப்படுறீங்க? அரசுக்கு அன்புமணி கேள்வி!!