மத்திய அமைச்சர் அமித் ஷாவிற்கு எதிராக போராட்டம் நடத்தப்போன இடத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அவமானப்படும் விதமாக அக்கட்சியினர் நடந்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடுத்தெருவில் வாய் தகராறு:
கோவை காந்தி பார்க் பகுதியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகையை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று மாலை நடைபெற்றது. இதில் கோ பேக் அமித் ஷா,கெட் அவுட் அமித் ஷா என்ற வாசகங்களை தலையில் அணிந்த படி காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்றனர்.

இதையும் படிங்க: உதாசீனப்படுத்திய ராகுல் காந்தி.. காங்கிரஸுக்கு அதிர்ச்சி கொடுக்கப்போகும் சசிதரூர்..!
தமிழகத்திற்கு கல்வி, பேரிடர் நிதி தர மறுக்கும் மத்திய அரசை கண்டித்தும் ,கோவை வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகையை கண்டித்தும் நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாடத்தில் காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் செல்வபெருந்தகை பங்கேற்றார்.
கையில் கருப்பு கொடிகளுடனும், கருப்பு பலூன்களுடனும் , அமத்ஷாவிற்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பாதகைகளுடன் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டம் தொடங்குவதற்கு முன்பாக காங்கிரஸ் கட்சியினர் இடையே உட்கட்சி பூசல் தொடர்பாக இரு தரப்பினரிடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. இரு தரப்பினரும் மாநில தலைவர் செல்வபெருந்தகை முன்பே வாக்குவாதம் செய்த நிலையில், அவர்களை மாநில தலைவர் செல்வப்பெருந்தகை சமாதானம் செய்தார்.
உட்கட்சி பூசலுக்கு காரணம் என்ன?
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக செல்வப் பெருந்தகை அடிமட்ட தொண்டனும் மாவட்ட தலைமைக்கு விண்ணப்பிக்கலாம் அதுவும் யாருடைய பரிந்துரை இல்லாமல் தன்னிச்சையாக இணையதளம் வாயிலாக பரிந்துரைக்க முடியும் என்ற நிலைமையை உருவாக்கினார். இதுதான் அவருக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. காரனம் அவர் இருக்கின்ற மாவட்ட தலைவர்களின் பதவிக்கு வேட்டு வைப்பதால் அனைவரும் ஓரணியில் திரண்டுள்ளனர்.

சமீபத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியில் உள்ள அதிருப்தி மாவட்ட தலைவர்கள் 25 பேர் தனி அணியாக திரண்டு டெல்லி சென்றதோடு, அங்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகாஜுன கார்கேவிடம், செல்வப்பெருந்தகை மீது புகார் கொடுத்துள்ளனர். மேலும் அவரை மாநில தலைவர் பதவியில் இருந்து தூக்கியடிக்க வேண்டும் என்றும் ஸ்ட்ராங்காக கோரிக்கை வைத்துள்ளனர். இதனால் செல்வப்பெருந்தகைக்கு காங்கிரஸ் கட்சியில் செல்வாக்கு குறைந்ததாகக்கூறப்படுகிறது. அதனை நிரூபிக்கும் வகையில் பாஜகவிற்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் நடு ரோட்டில் வாக்குவாதத்தில் ஈடுபட்டது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: காங்கிரஸ் என்னை மதிக்காவிட்டால் எனக்கு வேற சாய்ஸ் இருக்கு..! மிரட்டும் சசி தரூர்..!