காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், திருவனந்தபுரம் நாடாளுமன்ற தொகுதி எம்.பி யுமான சசி தரூர் தற்போது காங்கிரஸ் கட்சி தலைமையால் முழுவதுமாக ஓரம் கட்டப்பட்டு விட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
இதனைத் தொடர்ந்து பேசிய சசிதரூர் காங்கிரஸ், என்னை ஒதுக்கினால் எனக்கு செல்வதற்கு பல வாய்ப்புகள் இருக்கிறது, பல இடங்கள் இருக்கிறது என காட்டமாக தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரங்கள் தொடர்பாக, பிரபல முன்னணி ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு, சசி தருர் அளித்துள்ள பேட்டியில், பிரதமர் நரேந்திர மோடியை கடந்த காலத்தில் பாராட்டியது, தற்போது பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசாங்கத்தை புகழ்ந்தது போன்ற அவரது கருத்துகளால் எழுந்த சர்ச்சைகள் குறித்தும், நாட்டின் முன்னேற்றம் மற்றும் கேரளாவின் முன்னேற்றம் குறித்தும் தனது கருத்துக்களை எப்போதும் அச்சமின்றி தான் வெளிப்படுத்தி வருவதாக சசி தரூர் கூறினார்.
இதையும் படிங்க: ராகுல்காந்தியின் கேடுகெட்ட செயல்..! கண்டிக்காமல் 'ஹிந்தி' ராகம் பாடும் திராவிட கூட்டம்..!
நான் ஒரு அரசியல்வாதியைப் போல என்னை நினைக்கவில்லை. எனக்கு ஒருபோதும் குறுகிய அரசியல் சிந்தனைகள் இருந்ததில்லை, என்றும்,எனக்கு உறுதியாகத் தெரிந்த ஒன்றைப் பற்றி கருத்து தெரிவிப்பதற்கு முன்பு வரும் சங்கடங்கள் பிரச்சனைகள் பற்றி நான் ஒருபோதும் யோசித்ததில்லை. அதனால்தான் சில சமயங்களில் அரசாங்கங்கள் அல்லது காங்கிரசுக்கு போட்டியாக இருக்கும் கட்சிகளின் நல்ல முயற்சிகளைப் பாராட்டுகிறேன். பலர் இதை விரும்பவில்லை, நமது அரசியலில் இதற்கு இடமில்லை என்று கூறி,சசி தரூர் கூறினார்

ஆனால் பெரும்பான்மையான மக்கள், கையில் அட்டை ஏந்திச் செல்லும் கட்சி உறுப்பினர்கள் அல்ல என்று நான் நினைக்கிறேன். அவர்களுக்கு சொந்த நலன்கள், சார்புகள் உள்ளன, ஆனால் அவர்களில் பெரும்பாலோர் நியாயமான எண்ணம் கொண்டவர்கள். ஒரு அரசாங்கம் நல்ல விஷயங்களைச் செய்யும்போது அவர்கள் பாராட்டுகிறார்கள், தவறான நடவடிக்கைகளுக்காக அதை விமர்சிக்கிறார்கள்.
எனது கருத்துக்களுக்கு பொதுமக்களிடமிருந்து எதிர்மறையான எதிர்வினையை நான் ஒருபோதும் பார்த்ததில்லை. ஆனால் அது எனது காங்கிரஸ் கட்சியில் உள்ளது. எங்கள் போட்டியாளர்களைப் பற்றி நீங்கள் ஏன் நல்ல விஷயங்களைச் சொல்கிறீர்கள் என்று அவர்கள் என்னிடம் கேட்கிறார்கள்? ஆம், அவர்கள் நமது எதிரிகள்தான், ஆனால் அவர்கள் நல்ல காரியங்களைச் செய்யும்போது, நாம் அவர்களைப் பாராட்ட வேண்டும்.
கட்சி மாறுவது குறித்து தான் பரிசீலித்து வருவதாக வந்த வதந்திகளை மறுத்த சசி தரூர், அதில் உள்ள சில விஷயங்களில் ஒருவர் உடன்படவில்லை என்றால் கட்சி மாறுவதில் தான் நம்பிக்கை இல்லை என்றார். "அது சரியான செயலாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. கட்சிக்கு வெளியே இருக்கவும், சுயேச்சையாக இருக்கவும் ஒருவருக்கு சுதந்திரம் உள்ளது.

இன்றைய அரசியலில் நான் காண்பது எல்லோரும் ஒரு கட்சி அல்லது அமைப்பை ஆதரிக்க விரும்புகிறார்கள்.காங்கிரஸின் சித்தாந்தத்தையும் யோசனைகளையும் முன்னெடுத்துச் செல்ல, அதன் சித்தாந்தத்தையும் கருத்துக்களையும் முன்னெடுத்துச் செல்ல, காங்கிரஸ் உள்ளே ஒரு வலுவான நிறுவன அமைப்பை உருவாக்க வேண்டும் என்றும் சசி தரூர் அழைப்பு விடுத்தார்.
ஜனாதிபதி தேர்தலில் கட்சி கட்டுப்பாட்டை மீறி போட்டியிட விருப்பம் தெரிவித்ததால் கட்சிக்குள் ஓரங்கட்டப்பட்டதாக உணர்ந்தீர்களா? என்று கேட்டபோது ..செயற்குழு என்பது நூறு பேர் கொண்ட ஒரு அமைப்பு. நான் உறுப்பினராக்கப்பட்ட பிறகு அனைத்து கூட்டங்களிலும் கலந்து கொண்டேன்." அது எந்த பிரத்யேக முடிவையும் எடுப்பதை நான் பார்த்ததில்லை. நாங்கள் சந்திக்கும் போதெல்லாம் ஒரு அறைக்குள் நூறு பேர் இருப்பார்கள்.
அதில் நிரந்தர அழைப்பாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள், முன்னாள் அலுவல் உறுப்பினர்கள், பொதுச் செயலாளர்கள், பொறுப்பாளர்கள்... இது ஒரு பெரிய மாநாடு போன்று நடக்கும். இது ஒரு சிறிய குழு அல்ல. ஒரு மேஜையைச் சுற்றி அல்லது தரையில் அமர்ந்திருக்கும் ஒரு குழு. கூட்டம் கூடுவார்களே தவிர சரியான முடிவுகளை சரியான நேரத்தில் எடுக்க மாட்டார்கள் என சசிதரூர் மறைமுகமாக தனது பேட்டியில் சுட்டிக் காட்டினார். காங்கிரஸ் செயற்குழு பொதுக் கூட்டங்கள் முன்பு போல தற்போது நடப்பதில்லை எனவும் அவர் தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: வாயை விட்டு வசமாக சிக்கிய பாஜக மத்திய அமைச்சர்... வச்சி செய்ய நாள் குறித்த தமிழக காங்கிரஸ்...!