கர்நாடகா போக்குவரத்து நெருக்கடி பிரச்சனையை, ஒரே இரவில் கடவுளே வந்தாலும் கூட சரி செய்ய முடியாது என்று துணை முதலமைச்சர் சிவகுமார் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கொதித்தெழுந்த நெட்டிசன்கள் அவரை வறுத்தெடுத்து வருகிறார்கள். சரியான திட்டமிடலின் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். அவருடைய இந்த கருத்து குடியிருப்பாளர்கள், நகர்ப்புற திட்டமிடுபவர்கள், மற்றும் எதிர்க் கட்சிகளிடம் கடும் எதிர்ப்பை தூண்டி இருக்கிறது. உள் கட்டமைப்பு வளர்ச்சி மெதுவாக நடைபெறுவதற்கு மாநில அரசை அவர்கள் குற்றம் சாட்டினார்கள்.

சாலை கட்டுமான கருத்தரங்கு ஒன்றில் பேசிய அவர் அந்த தெய்வமே வந்தால் கூட நகரத்தின் பிரச்சினைகளை ஒரே இரவில் தீர்க்க முடியாது என்று சிவகுமார் கூறியிருந்தார். சரியான திட்டமிடல் மற்றும் செயல்படுத்தல் மட்டுமே நீண்டகால முன்னேற்றத்தை கொண்டு வரும் என்றும் அவர் வலியுறுத்தி இருந்தார்.
இதையும் படிங்க: திருடன், போலீஸ் விளையாட்டால் விபரீதம்.. பொம்மை துப்பாக்கி என நினைத்து சுட்டதில் சிறுவன் மரணம்..!
அதைத்தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் தாமதமான மெட்ரோ விரிவாக்கம் மற்றும் மோசமான பொது போக்குவரத்து குறித்து பல சமூக ஊடகங்களில் தங்கள் விரக்தியை மக்கள் வெளிப்படுத்தி வந்தனர். அதற்குப் பதிலளிக்கும் வகையில் தான் பெங்களூரை இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் மாற்ற முடியாது என்று அவர் கூறியிருந்தார்.
பொருளாதார நிபுணர் மோகன்தாஸ் பாய், சிவகுமாரின் கருத்துக்களை மறுத்து நகரத்தின் உள் கட்டமைப்பை மேம்படுத்துவதில் அரசாங்கத்தின் முன்னேற்றம் இன்மை பற்றி கேள்வி எழுப்பினார். "அமைச்சர் டி.கே சிவகுமார், நீங்கள் பதவி ஏற்று இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. ஒரு வலிமையான தலைவராக நாங்கள் உங்களை வரவேற்றோம். ஆனால் எங்கள் வாழ்க்கை மோசமாகிவிட்டது" என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

முழுமை அடையாத கட்டமைப்பு திட்டங்கள், மோசமாக பராமரிக்கப்படும் நடைபாதைகளும் மற்றும் போதுமான பொது போக்குவரத்து இல்லாததை அவர் எடுத்துரைத்தார். ஐந்து ஆயிரம் மின்சார பேருந்துகளை சேர்ப்பது, பாதசாரி வசதிகளை மேம்படுத்துவது மற்றும் 24 மணி நேரமும் மெட்ரோ விரிவாக்கத்தை விரைவுபடுத்துவது உள்ளிட்ட உடனடி நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
எதிர்க்கட்சியான பாஜகவும் சிவகுமாரின் அறிக்கையை விமர்சித்தது. "காங்கிரஸ் தலைமையிலான கர்நாடக அரசு பெங்களூருவில் உள்கட்டமைப்பு நெருக்கடியை நிவர்த்தி செய்ய தவறிவிட்டதாக" அந்த கட்சி குற்றம் சாட்டி இருக்கிறது.
விமர்சனங்களுக்கு பதில் அளிக்கும் விதத்தில் அரசாங்கம் தீர்வுகளில் தீவிரமாக செயல்பட்டு வருவதாக சிவகுமார் பின்னர் தெளிவு படுத்தினார். பெங்களூருவின் அழுத்தமான போக்குவரத்து பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதௌ நோக்கமாகக் கொண்ட சாலைகள் குறித்த புதிய கையேடு வெளியிடுவதாக அப்போது அவர் அறிவித்தார். இந்த முயற்சியில் நெரிசலை குறைக்கவும் பொது போக்குவரத்தை மேம்படுத்தவும் சிறந்த சாலைகள் மற்றும் பேருந்து நிலையங்களை வடிவமைப்பதும் அடங்கும்.
அரசாங்கம் நீண்ட கால திட்டமிடலை வலியுறுத்தும். அதே வேளையில் பெங்களூருவின் போக்குவரத்து மேலும் மோசம் அடைவது தடுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குடியிருப்பாளர்களும் வல்லுனர்களும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
இதையும் படிங்க: மாஜி எம்எல்ஏவை அடித்துக் கொன்ற ஆட்டோ டிரைவர்: கர்நாடகாவில் பரபரப்பு