சென்னையில் இருந்து மதுரைக்கு இன்று அதிகாலை பயணிகளை ஏற்றிக்கொண்டு அடுத்தடுத்து 4 ஆம்னி பஸ்கள் அதிவேகத்தில் சென்றுக்கொண்டிருந்தன. கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது அடுத்தடுத்து ஆம்னி பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய கோர விபத்து நடந்தது. அப்போது தூக்கத்தில் இருந்த பயணிகள் அலறி கூச்சலிட்டபடி எழுந்தனர்.

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வேப்பூர் மேம்பால கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து சர்வீஸ் சாலைக்கு மாற்றப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை சென்னையில் இருந்து திருச்சி நோக்கிச் சென்ற 3 தனியார் சொகுசு பேருந்துகள் அதி வேகத்தில் அப்பகுதியில் சென்று கொண்டிருக்கும் பொழுது திடீரென சர்வீஸ் சாலைக்கு திரும்ப வேண்டிய சூழ்நிலையில் ஏற்பட்டுள்ளது. முன்னதாக சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற அரசு பேருந்து பஸ் சடன் பிரேக் அடித்ததில் பின்னால் வந்த லாரி பேருந்தின் மீது மோதியது. அப்போது, சொகுசு பேருந்து ஒன்று லாரியின் பின்புறத்தில் மோதி நின்றது. திருச்சி நோக்கி சென்ற 2 தனியார் சொகுசு பேருந்துகளும் அடுத்தடுத்து மோதின.
இதையும் படிங்க: அதிகாலையில் நிகழ்ந்த கொடூர விபத்து.. 5 பேர் பலி.. பேருந்தில் மோதி அப்பளம் போல் நொறுங்கிய கார்..!

இந்த விபத்தில் பேருந்துகளின் முன்பகுதி மற்றும் பின்பகுதி கடுமையாக சேதமடைந்தன. ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த பயணிகள் அலறி கூச்சலிட்டனர். அடுத்தடுத்து 3 பேருந்துகள் மோதி விபத்துக்கு உள்ளானதில், பேருந்துகளில் பயணம் செய்த 35க்கும் மேற்பட்ட பயணிகள் உடலில் தலை கை, கால் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பலத்த காயமடைந்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வேப்பூர் போலீசார், தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் பலத்த சேதமடைந்த பேருந்து ஒன்றுக்குள் சிக்கிக்கொண்ட ஓட்டுநர் மற்றும் பயணி ஒருவரை பத்திரமாக மீட்டனர். விபத்தில் காயம் அடைந்த பயணிகள் அடுத்தடுத்து மீட்கப்பட்டனர். வேப்பூர் மற்றும் பெரம்பலூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்துள்ளனர். விபத்து குறித்து வேப்பூர் போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.

அடுத்தடுத்து 4 ஆம்னி பேருந்துகள் மோதிக் கொண்டதால் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் தொடர்ந்து விபத்தில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்தியும் போக்குவரத்தை சரி செய்யும் பணியிலும் ஈடுபட்டனர். மேம்பால கட்டுமான பணிகள் நடந்து வருவதால் வாகனங்கள் அனைத்தும் மேம்பாலத்தில் இருந்து சர்வீஸ் சாலை வழியாக திருப்பி விடப்படுகின்றன. இதனால் அந்த பகுதியில் தொடர்ந்து விபத்துகள் நடப்பதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: பட்டாசு குடோனில் திடீர் தீ விபத்து.. தரைமட்டமான பட்டாசு ஆலை.. 3 பெண்கள் பலி.. நிவாரணம் அறிவித்த முதல்வர்..!