மாணவர்களை பெருமளவு பாதிக்கும் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வலியுறுத்தி தமிழக அரசு சார்பில் மத்திய பாஜகிரகணம் பல்வேறு கோரிக்கை மனுக்கள் அழிக்கப்பட்டது. ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் தமிழக சட்டப்பேரவையில் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் வகையில் ஒருமனதாக மசோதா நிறைவேற்றப்பட்டது.
நீட் நுழைவுத் தேர்வின்றி, வழக்கமான நடைமுறையில் மாணவர் சேர்க்கை நடத்த, இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி, மாணவர்களுக்கு பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தி, நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பதற்காக மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

ஆனால் அந்த மசோதாவை மத்திய உள்துறை அமைச்சகம் திருப்பி அனுப்பியது. இதனை எடுத்து மீண்டும் பேரவையில் நீட் விளக்க மசோதாவை நிறைவேற்றி ஆளுநர் மூலம் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டது. ஆனால் அதற்கும் எந்த விதமான பதிலும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அடுத்த கட்ட நடவடிக்கையாக அனைத்து கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தப்படும் என்ற தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்து இருந்தார்.
இதையும் படிங்க: நீட் விலக்கு: வரும் 9-ந் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம்.. சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

கடந்த 4-ம் தேதி சட்டசபையில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், நீட் தேர்வு முறையை அகற்றுவதற்கான நமது போராட்டம் எந்த வகையிலும் முடிந்துவிடவில்லை என்றும் போராட்டத்தின் அடுத்த கட்டத்தில் நாம் எடுக்க வேண்டிய சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் குறித்து சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசிக்கப்படும் எனவும் இது தொடர்பாக அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்களிடமும் கலந்தாலோசனை கூட்டம் வரும் ஏப்ரல் 9ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவித்தார்.

இதனிடையே இன்று மாலை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இதில் அனைத்து கட்சி சட்டமன்ற தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த நிலையில், நீட் தொடர்பான அனைத்து கட்சி கூட்டத்தை அதிமுக புறக்கணிக்கிறது என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தொகுதி மறுவரையறையால் வட இந்தியாவுக்கு மட்டும் சாதகமா.? முதல்வர் ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பதிலடி!