''அம்பேத்கரை ஒரு குறுகிய சாதி வட்டத்திற்குள் அடைப்பதற்கு விசிக முயற்சி செய்கிறது'' என கடுமையாக விமர்சித்துள்ளார் இந்து முன்னணி அமைப்பின் தலைவர் அர்ஜூன் சம்பத்.
கோவையில், செய்தியாளர்களை சந்தித்த அவர், ''பொன்முடி மன்னிப்பு கேட்டுவிட்டார். கனிமொழி கண்டித்து விட்டார். பொன்முடியின் பதவியை பறித்து விட்டார்கள் என்பதெல்லாம் கந்துடைப்பு நடவடிக்கை. எங்களுக்குத் தேவை சட்டநடவடிக்கை. திட்டமிட்டு தமிழர் சமயங்களான சைவத்தையும், வைணவத்தையும்… தமிழருடைய அடையாளம் திருநீரு… தமிழருடைய அடையாளம் திரு மண். இதனை விபச்சாரத்துடன் ஒப்பிட்டு பேசியிருக்கிறாய். இது வாய்க்கொழுப்பு பேச்சு. திட்டமிட்டுத்தான் பேசி இருக்கிறார். அதேமாதிரிதான் ஆ.ராசா. திமுககாரர்கள் யாரும் குங்குமம் வைத்துக் கொள்ளக் கூடாது. கையில் யாரும் கயிறு கட்டக்கூடாது எனச் சொல்லி இருக்கிறார், அதற்கு சேகர்பாபு பதிலடி கொடுத்து இருக்கிறார்.

திமுகவை திககாரன் ஆக்கிரமித்து இருக்கிறான். இந்த ஆட்சி அதிகாரத்தை சுரண்டி திங்கிறான். ஆ.ராசா போன்றவர்கள், பெரியாரிஸ்ட் என்று சொல்லக்கூடிய பொன்முடி போன்றவர்கள் அறிவாலயத்தில் அசுர கீதம் என்கிற நிகழ்ச்சியை நடத்துகிறார்கள். அந்த நிகழ்ச்சியில் வேண்டுமென்றே உள்நோக்கத்தோடு, சனாதன ஹிந்து தர்மத்தை கேவலப்படுத்தி, பிராமணர்களை கேவலப்படுத்தி.. இது தொடர்ந்து திமுகவில் நடந்து கொண்டு இருக்கிறது.
இதையும் படிங்க: அம்பேத்கர் ஜெயந்தி- 2025: பாபா சாகேப் இஸ்லாம் மதத்தை ஏற்காதது ஏன் தெரியுமா..?
பொன்முடி கைது செய்யப்பட வேண்டும். அதே மாதிரி துரைமுருகன் மாற்றுத்திறனாளிகளை பேசிவிட்டு மன்னிப்பு கேட்கிறார். இதையெல்லாம் தெரிந்துதான் பேசுகிறார்கள். இதெற்கெல்லாம் சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை முன் வைத்திருக்கிறோம். அவர்களது எம்.எல்.ஏ பதவி, அமைச்சர்கள் பதவி பறிக்கப்பட வேண்டும்.

அம்பேத்கருக்கும், விடுதலை சிறுத்தைகளுக்கும் துளியும் சம்பந்தம் கிடையாது. அம்பேத்கருக்கும் திராவிடர்கழகத்துக்கும் துளியும் சம்பந்தம் கிடையாது. ஆனால், திராவிடர் கழகமும், விடுதலை சிறுத்தைகளும், அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கச் சென்றால் இந்து முன்னணி அமைப்பினர் மீது கல்வீசித் தாக்குவது, கருப்புக் கொடி காட்டுவது என இந்த நிகழ்ச்சிகள் கடந்த 6ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கிறது. அம்பேத்கர் ஒரு தேசிய தலைவர். அவருக்கு மரியாதை செலுத்த அனைவருக்கும் உரிமை உண்டு.

ஆனால், அம்பேத்கரை ஒரு குறுகிய சாதி வட்டத்திற்குள் அடைப்பதற்கு விசிக முயற்சி செய்கிறது. குறிப்பாக சென்னை அம்பேத்கர் மணி மண்டபத்திலே நீதிமன்றத்தின் அனுமதி பெற்று நாங்கள் மாலை அணுவிக்கச் சென்றோம். அப்போதும் காவிகள் அம்பேத்கர் சிலை அருகிலே வரக்கூடாது என்று சொன்னார்கள். இது மூடத்தனமான பேச்சு. அம்பேத்கரே காவிதான். அம்பேத்கர் எந்த மதத்திற்கு மாறினார் புத்தமதத்திற்கு மாறினார். புத்த மதத்திற்கு மாறி காவி உடை அணிந்து கொண்டு அம்பேத்கர் நின்றார். அவரே காவி உடையை ஏற்றுக் கொண்டவர்.

ஆனால், மிகவும் குறுகிய மனப்பான்மையோடு விசிக நடந்து கொள்கின்றனர். அம்பேத்கர் இந்துவாக இருப்பவர்களுக்கு மட்டுமே இடஒதுக்கீட்டை அறிவித்தவர். ஒருவர் மதம் மாறிச் சென்றுவிட்டால் இட ஒதுக்கீடு கிடையாது. இதே திருமாவளவன் இஸ்லாமியாக மாறப்போவதாகச் சொல்கிறார். மாறிவிட்டார் என்றால் அவருக்கு இட ஒதுக்கீடு கிடைக்காது'' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பொன்முடியின் தூக்கத்தைக் கெடுத்த வானதி சீனிவாசன்... இன்று மாலை அதிரடி அறிவிப்பு!