பிரேசிலின் விட்டோரியா டா கான்கிஸ்டா பகுதியை சேர்ந்தவன் 14 வயதான சிறுவன் டேவி நூன்ஸ் மொரேரா (Davi Nunes Moreira). விளையாட்டாக அவ்வப்போது ஆன்லைனில் பகிரப்பட்டும் சேலஞ்சுகளை நிறைவேற்றி வந்துள்ளார். திடீரென சிறுவனுக்கு உடல்நிலை மோசமானது. காய்ச்சல், வாந்தி, மயக்கத்தால் அவதி அடைந்த சிறுவனை அவனது பெற்றோர் கவனித்துள்ளனர். இதுகுறித்து சிறுவனிடம் விசாரிக்கையில் எதுவும் தெரியவில்லை என மழுப்பி உள்ளான். காலில் காயம் போல ஏதோ தென்படவே பெற்றோர் அதை சுட்டிக்காட்டி விசாரித்துள்ளனர்.

விளையாடும் போது காலில் அடிபட்டு காயம் ஆகிவிட்டது. அது செப்டிக் போல ஆகியுள்ளது என சிறுவன் கூறியுள்ளான். உடனே சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற அவனது பெற்றோர், காயத்திற்கு மருத்துவம் பார்த்துள்ளனர். பின்னர் வீட்டுக்கு அழைத்து வரப்பட்ட நிலையில், சிறுவன் நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்தது. படுத்தபடுக்கையான சிறுவனிடம் ஏதோ தவறாக நடந்திருப்பதை புரிந்துகொண்ட பெற்றோர் மருத்துவமனையில் அட்மிட் செய்தனர். அதற்குள் தான் செய்த காரியத்தை சிறுவன் பெற்றோரிடம் ஒப்புக்கொண்டுள்ளான்.
இதையும் படிங்க: வரதட்சணை கேட்டு, புதுப்பெண்ணுக்கு 'எச்.ஐ.வி. இஞ்செக்சன்' செலுத்திய கொடூரம்: ரூ.50 லட்சம் 'சீர் வரிசை' கொடுத்தும், ஆசை அடங்காத மாமியார்!

அதாவது, ஆன்லைன் மூலம் விளையாட்டாக கொடுக்கப்பட்ட ஒரு சேலஞ்சை நிறைவேற்ற, தோட்டத்தில் பறந்து திரிந்த பட்டாம்பூச்சியை பிடித்து, அதை அரைத்து, அந்த திரவத்தை ஊசி மூலம் சிறுவன் தனது காலில் செலுத்தி உள்ளான். அந்த ஒவ்வாமை காரணமாக சிறுவனுக்கு உடலில் ஒவ்வொரு உறுப்பாக செயலிழந்துள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். சிறுவன் முன்னரே இதுகுறித்து பெற்றோருக்கு தகவல் தெரிவித்திருந்தால், டாக்டர்கள் முன்னெச்சரிக்கையை நடவடிக்கைகளை எடுத்திருப்பார்கள். ஆனால் சிறுவன் தனது இறுதிக்கட்டத்திலேயே இதுகுறித்து பெற்றோரிடமும், டாக்டர்களிடமும் உண்மையை தெரிவித்துள்ளான். இதற்கிடையே நிலைமை கைமீறி போனதால் சிறுவனை காப்பாற்றமுடியவில்லை. ஒருவார கால சிகிச்சை பலனின்றி சிறுவன் இறந்து போனான்.

இதனிடையே சிறுவன், பட்டாம்பூச்சியை அரைத்து உடலில் செலுத்திக்கொண்டதாக கூறப்படும் ஊசி, சிறுவனின் படுக்கை அறையில், அவனது மெத்தையில், தலையணைக்கு அடியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குபதிந்துள்ளனர். சிறுவன் இறப்பிற்கு இதுதான் காரணமா? இல்லை வேறு ஏதும் காரணமங்களா? என சிறுவனின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளிவந்த பிறகு தான் தெரியும் என போலீசார் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே ஆன்லைனில் சிறுவனுக்கு இது போன்ற சவால்களை கொடுத்தது யார்? இதுபோல் உயிரை பறிக்கும் சவாலை சிறுவன் செய்தது ஏன்? இந்த சிறுவனுக்கு வழங்கியது போல வேறு யாருக்கெல்லாம் அந்த நபர் வினோதமான சவால்களை வழங்கியுள்ளார் என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து விளக்கம் அளித்த பட்டாம்பூச்சி நிபுணரும் சாவ் பாலோ பல்கலைக்கழகத்தின் விலங்கியல் அருங்காட்சியகத்தின் இயக்குநருமான மார்செலோ டுவர்டே(Marcelo Duarte) , பட்டாம்பூச்சி விஷத்தன்மை உடையதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் அதன் சிக்கலான உயிரியல் அமைப்பு மனித உடலுக்கு அலர்ஜியை ஏற்படுத்தக்கூடும் என எச்சரித்துள்ளார். பட்டாம்பூச்சியை அரைத்து உடலுக்குள் செலுத்திக்கொள்வது அலர்ஜியின் பாதிப்பை தீவிரமாக்குவதோடு, உயிரைக்கூட கொல்ல வாய்ப்பு இருக்கிறது என்றார்.
இதையும் படிங்க: அதிவேகத்தில் பறந்த கார்.. பறிபோன தொழிலாளி உயிர்..! சாலை மறியலில் குதித்த உறவினர்கள்..!