சீனாவின் டோங்குவான் நகரத்தைச் சேர்ந்தவன் ஜென்ஹாவோ ஜூ. செல்வங்கள் கொழிக்கும் பணக்கார வீட்டு இளைஞன். வயது 28. இவன் தனது 20 வயதில் அயர்லாந்தின் பெல்ஃபாஸ்டில் உள்ள குயின்ஸ் பல்கலைக்கழகத்தில் இயந்திர பொறியியல் பட்டப்படிப்பினை முடித்துள்ளான். அதன் பிறகு செப்டம்பர் 2019 இல், அவர் இயந்திர பொறியியலில் முதுகலைப் பட்டம் படிக்க லண்டனுக்குச் சென்றுள்ளான். அப்போது கோவிட் தொற்று ஏற்பட மீண்டும் சீனாவுக்கு திரும்பி உள்ளான்.

கோவிட் முடித்து 2023ல் லண்டன் சென்ற ஜென்ஹாவோ, இந்த காலக்கட்டத்தில் சீனா, லண்டன் இரண்டு இடங்களையும் சேர்த்து 10 பெண்களை போதை மருந்து கொடுத்து கற்பழித்ததாக குற்றம் சாட்டப்பட்டான். அதில் 2 பெண்கள் அடையாளம் காணப்பட்டுள்ளான்ர். இவனால் மேலும் 50 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இதையும் படிங்க: 2035-க்குள் வல்லரசாக மாற்றம்..? பாதுகாப்பு பட்ஜெட் 7.2% அதிகரிப்பு: எதிரி நாடுகளை மிரட்ட சீனா நாடகம்..?

பணக்கார வீட்டு இளைஞனான ஜென்ஹாவோ ஜூ, சமூக வலைதளங்கள் மூலம் பெண்களுடன் பழகுவதை வழக்கமாக கொண்டுள்ளான். பின்னர் அந்த பெண்களுக்கு போதை மருந்தை பழக்கப்படுத்துவான். அதன் பின் அவர்களை தனது அபார்ட்மெண்டிற்கு அழைத்து வந்து போதையில் அவர்களை மயக்கமடைய செய்து பாலியல் வன்கொடுமை செய்வதை வழக்கமாக வைத்துள்ளான். இவனால் சீனாவில் 7 பெண்களும், இங்கிலாந்தில் 3 பெண்களும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானது நிரூபிக்கப்பட்டுள்ளது. அவர்களை பாலியல் வன்கொடுமை செய்தபோது, அதை தனது மொபைலில் படம் பிடித்து வைத்திருந்தது ஜென்ஹாவோவுக்கே எதிராய் அமைந்தது.

நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின் போது, அந்த பெண்கள் சம்மதத்துடனே உடலுறவு நடந்ததாகவும், அவர்கள் பணம், பரிசுகள் பெற்று தனக்கு உடன்பட்டதாகவும் தெரிவித்துள்ளான். உடலுறவின் போது பெண்களை தாக்குவது தனக்கு பிடிக்கும் எனவும், அதற்கும் அவர்கள் சம்மதம் தெரிவித்ததுடன் அதற்கான பணம், பரிசுகளை பெற்றனர் என்றும் வாதிட்டான்.
ஆனால் அவனது மொபைல் போனில் இருந்து 1000க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்களை கைப்பற்றிய போலீசார், அதில் எந்த பெண்ணும் சுயநினைவில் இல்லை என வாதிட்டனர். மித மிஞ்சிய போதையால் பெண்கள் மயங்கி கிடந்த போது, இத்தகைய கொடூரத்தை ஜென்ஹாவோ செய்துள்ளதாக அவர்கள் வாதிட்டனர். மேலும் ஜென்ஹாவோ கற்பழித்ததாக கூறப்படும் 9 பெண்களின் வீடியோக்களையும் கோர்ட்டில் சமர்பித்தனர்.

பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்படும் வீடியோக்களை பார்த்த நீதிபதிகள் ஜென்ஹாவோ ஜூக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தனர். 19 மணி நேரத்திற்கும் மேலான விவாதங்களுக்குப் பிறகு, ஜென்ஹாவோ ஜூ லண்டனில் மூன்று பெண்களையும் சீனாவில் ஏழு பெண்களையும் பாலியல் பலாத்காரம் செய்ததாக நீதிபதிகள் முடிவு செய்தனர்.
தீர்ப்புகள் நீதிமன்றத்தில் வாசிக்கப்பட்டபோது ஜூ எந்த உணர்ச்சியையும் காட்டவில்லை. அவன் மீது பாலியல் வன்கொடுமை செய்ததற்காகவும், தீவிர ஆபாசப் படத்தை வைத்திருந்ததற்காகவும், பாலியல் குற்றத்தைச் செய்யும் நோக்கத்துடன் தடை மருந்தை வைத்திருந்ததற்காகவும் தொடரப்பட்ட வழக்கில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டது. இந்நிலையில் ஜூ மேலும் 50 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். அப்படி அந்த குற்றம் நிரூபனம் ஆனால், லண்டன் வரலாற்றிலேயே மிகப்பெரிய பாலியல் குற்றவாளியாக அவன் அறியப்படுவான் என்றும் கூறினர்.
இதையும் படிங்க: நாங்க எதுக்கும் ரெடி..! அமெரிக்கா போரை விரும்பினால் வரலாம்... அதிபர் ட்ரம்புக்கு ஷாக் கொடுத்த சீனா..!