தென் அமெரிக்காவில் இருக்கும் கொலம்பியா நாட்டில் மஞ்சள் காய்ச்சல் வேகமாகப் பரவுவதையடுத்து, அங்கு சுகாதார அவசரநிலையை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இதுவரை மஞ்சள் காய்ச்சலுக்கு 34 பேர் உயிரிழந்துள்ளனர். மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும், ஈஸ்டர் பண்டிகை வருவதையடுத்து, மக்கள் தகுந்த முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும், வெளிநாடுகளுக்குச் செல்லும் போது முறையாக தடுப்பூசி செலுத்திச் செல்லுங்கள் என கொலம்பியா அரசு தெரிவித்துள்ளது.

கொலம்பியா அதிபர் கஸ்டாவோ பெட்ரோ, ஏற்கெனவே சுகாதார அவசர நிலையை பிரகடனம் செய்த நிலையில், அதோடு பொருளாதார அவசர நிலையையும் அறிவித்துள்ளார். அவர் விடுத்த அறிவிப்பில் “கொலம்பியாவில் தடுப்பூசி செலுத்தாத மக்கள் யாரும் அதிகமாகமக்கள் கூடும் இடங்களுக்குச் செல்வது ஆபத்தாக முடியும். ஆதலால் விரைவாக தடுப்பூசி செலுத்துங்கள்” என எச்சரித்துள்ளார்.
இதையும் படிங்க: வக்ஃபு மசோதா சட்டவிரோதமானதா? நான் ராஜினாமா செய்வேன்! சவால்விட்ட பாஜக எம்.பி.,

மஞ்சள் காய்ச்சல் என்றால் என்ன?
உலக சுகாதார அமைப்பின் வரையறையின்படி, “மஞ்சள் காய்ச்சல் பகலில் கடிக்கும் கொசுக்கள் மூலம் பரவக்கூடியது. மனிதர்களில் ஒருவருக்கு வந்தால் அடுத்தடுத்து மற்றவர்களுக்கும் வேகமாகப் பரவும். மஞ்சல் காய்ச்சலால் ஒருவர் பாதிக்கப்பட்டால் அவருக்கு அறிகுறியாக காய்ச்சல், வாந்தி, குமட்டல், மணம், சுவை இழத்தல், உடல்வலி ஆகியவை 3 முதல் 6 நாட்களுக்கு நீடிக்கும். மிகவும் வேகமாக் பரவக்கூடிய காய்ச்சல் என்பதால் எல்லையோர மக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும்.

கொலம்பியாவில் இதுவரை 74 பேர் மஞ்சள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, அதில் 34 பேர் உயிரிழந்தனர் என்று கொலம்பியா சுகாதாரத்துறை அமைச்சர் குலர்மியோ ஜராமிலா தெரிவித்துள்ளார். சுகாதாரத்துறை அமைச்சர் குலர்மியோ ஜராமிலா கூறுகையில் “இந்த காய்ச்சலால் ஒருவர் பாதிக்கப்பட்டால் முறையான தடுப்பு முறைகளை பின்பற்றாவிட்டால் உயிருக்கு ஆபத்தாக முடியும். அதனால்தான் இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் 50 சதவீதம் உயிரிழக்க வாய்ப்புள்ளதாக அவசரநிலை பிறப்பித்துள்ளோம். கொலம்பியா நாட்டுக்குள் வருவோர், வெளிநாடுகளுக்கு செல்வோர் தடுப்பூசி செலுத்திய அட்டையை வைத்திருக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் தொற்றுநோய் தடுப்பு மையமான சிடிசி, கொலம்பியாவில் மஞ்சள் காய்ச்சல் பரவுவதையடுத்து, பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொலம்பியாவில் இருந்து யாரும் வந்தால் முறைப்படி பரிசோதனை செய்து, தடுப்பூசி சான்றிதழ் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய பிடியை இறுக்கியுள்ளது.
பொலிவியா, பெரு, சிலி நாடுகளின் அரசுகள், கொலம்பியா அல்லதுவேறு எந்த நாட்டுக்கு செல்வதாக இருந்தாலும் 10 நாட்களுக்கு முன்பே தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என எச்சரித்துள்ளது.
இதையும் படிங்க: ‘பணம், மது, பரிசுக்காக ஓட்டுகளை விற்பவர்கள் மறுபிறவியில் விலங்குகளாகப் பிறப்பார்கள்’.. பாஜக எம்எல்ஏ பேச்சு..!