வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக இன்று தமிழக சட்டப்பேரவையில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் உறுப்பினர்கள் கருப்புப் பட்டை அணிந்து வந்தது கண்டித்தக்கது மற்றும் ஒரு நாடகம் என தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக தன்னுடைய எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவு வருமாறு..
திமுக மற்றும் அதன் கூட்டணி எம்எல்ஏக்கள் கருப்பு பட்டை அணிந்திருப்பதும், வக்பு மசோதாவை உச்ச நீதிமன்றத்தில் எதிர்க்கப் போவதாக மு.க.ஸ்டாலின் அறிவித்திருப்பதும் உட்பட இன்று சட்டமன்றத்தில் திமுகவின் தப்புக்கணக்கு மிகவும் கணிக்கத்தக்கதாகி விட்டது. இந்த நாடகம் எல்லாம் அவர்களின் சிறுபான்மை வாக்கு வங்கியின் ஒரு பகுதியை காப்பாற்றுவதற்காகவே போடுகிறார்கள்.
இதையும் படிங்க: போதைப்பொருட்களை ஒழிக்க திமுக என்ன செய்தது..? எகிறி அடிக்கும் எடப்பாடி பழனிசாமி..!

முந்தைய வக்பு சட்டத்தால் இந்துக்கள் மட்டுமல்ல, கிறிஸ்தவர்களும் கூட பாதிக்கப்பட்டார்கள் என்பதை தமிழக முதலமைச்சர் உணரவில்லையா? தயவுசெய்து உங்கள் நாடகத்திற்காக சட்டமன்றத்தைப் பயன்படுத்த வேண்டாம்.
அவர்களின் நாடகத்தின் தொடர்ச்சியாக, அடுத்த ஆண்டு தேர்தலுக்கு முன்பு 2025 வக்பு மசோதாவை எதிர்க்க அப்பாவின் முயற்சிகள் என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை எழுத திமுக. ஒருவரை நியமிக்கும். அதை ஒரு தேர்தல் பிரசாரமாக முன்னெடுத்து, 2026 சட்டமன்ற மற்றும் 2029 நாடாளுமன்றத் தேர்தல்களில் அப்பாவி முஸ்லிம்களை தவறாக வழிநடத்தும்.
ஏமாற்றவும், பிரிவினைப்படுத்தவும் மட்டுமே தி.மு.க.வுக்குத் தெரியும்... இவ்வாறு அந்த பதிவில் அண்ணாமலை கூறியுள்ளார்.

நேற்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா மீது விடிய விடிய விவாதம் நடைபெற்றது. அதிகாலை 2 மணியளவில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் மசோதாவுக்கு ஆதரவாக 288 வாக்குகளும், எதிராக 232 வாக்குகளும் பதிவாகின. இதன்மூலம் மக்களவையில் இந்த மசோதா நிறைவேறியது. இன்று மாநிலங்களவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடைபெறும்.
மக்களவையில் வக்பு மசோதா நிறைவேறியதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்போவதாகவும் கூறியிருந்தார். அதன் நீட்சியாக இன்று தமிழக சட்டப்பேரவைக்கு வந்த திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சி எம்எல்ஏக்கள் கருப்பு பட்டை அணிந்து வந்தனர்.
இதையும் படிங்க: சிக்கன் கடையில் சண்டை; சரக்கு பாட்டிலால் திமுக நகர் மன்ற உறுப்பினர் மண்டை உடைப்பு.. !