2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழக அரசியல் களத்தில் பல்வேறு பரபரப்பான நகர்வுகள் இப்போதே தொடங்கியுள்ளன. சமீபத்தில் எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி அதிமுக மூத்த தலைவர்களுடன் டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசினார்.
எனவே, கடந்த மக்களவை தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி முறிந்த நிலையில், தற்போது அந்த கூட்டணி மீண்டும் சட்டப்பேரவை தேர்தலில் துளிர்க்க போகிறதா? என்பதே மையக் கேள்வியாக அமைந்துள்ளது.

சென்னை வந்துள்ள அமித்ஷா, மயிலாப்பூரில் உள்ள ஆடிட்டர் குருமூர்த்தி இல்லத்தில் 1 மணி நேரத்திற்கும் மேலாக மத்திய அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தி வருகிறார். அமித்ஷா - குருமூர்த்தி மட்டுமே ஆலோசித்து வருவதாகவும் அண்ணாமலை, எல்.முருகன் ஆகியோர் பேச்சுவார்த்தையில் இல்லை எனவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வயிற்றில் அடிக்கிறது திமுக அரசு.. இபிஎஸ் காட்டம்..!
சென்னை வருகை தந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இன்று பிற்பகல் 1.30 மணி அளவில் செய்தியாளர்களை சந்திக்க உள்ளார். ஏற்கனவே பகல் 12 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்க திட்டமிட்டிருந்த நிலையில், தற்போது செய்தியாளர் சந்திப்புக்கான நேரம் மாற்றப்பட்டுள்ளது.

தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெறும் செய்தியாளர் சந்திப்பில் அமித்ஷாவுடன் கூட்டணிக் கட்சித் தலைவர்களும் பங்கேற்கின்றனர். செய்தியாளர் சந்திப்புக்காக 7 இருக்கைகள் மட்டுமே போடப்பட்டுள்ளதால், இடம்பெறப் போகும் தலைவர்கள் யார் யார் என கேள்வி எழுந்துள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்கும் செய்தியாளர் சந்திப்பு தேசிய ஜனநாயக கூட்டணியின் (NDA) செய்தியாளர் சந்திப்பு என்று திரையிடப்பட்ட LED திடீரென மாற்றப்பட்டது. கூட்டணி கட்சித் தலைவர்கள் யாரும் வராததால் அமித்ஷா செய்தியாளர் சந்திப்பில் பேனர் மாற்றம் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. கிண்டி ஐடிசி நட்சத்திர விடுதியில் நடைபெறவுள்ள செய்தியாளர் சந்திப்பில் இன்று தேசிய ஜனநாயக கூட்டணி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கூட்டணி கட்சித் தலைவர்கள் யாரும் பங்கேற்கவில்லை எனக்கூறப்படுகிறது.

கூட்டணி பேச்சு வார்த்தைக்கு அமித் ஷா அழைத்தும் ஜி.கே.வாசன் மட்டுமே வந்துள்ளதாகவும், டிடிவதினகரன் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், பாமக உட்கட்சி விவகாரத்தால் தில் பங்கேற்கவில்லை என்றும் கூறப்படுகிறது. எடப்பாடி பழனிசாமிக்கு கொடுக்கப்பட்ட சில நிபந்தனைகளை ஏற்கவில்லை என்பதால் அவரும் இந்த செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்க மறுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. . இதனால், அமித் ஷா கடும் கோபம் அடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ஆளுநருக்கு எதிரான தீர்ப்பு.. திகைத்து போய் சைலண்ட் மோடில் அதிமுக.. விளாசும் திமுக கூட்டணி கட்சி!