அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் பாரம்பரிய புகழ்பெற்ற ஹார்வார்ட் பல்கலைக்கழத்துக்கு இடையிலான மோதல் முற்றியுள்ளது. ஹார்வார்ட் பல்கலைகத்துக்கான வரிச் சலுகையை ரத்து செய்வேன் என்று அதிபர் ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். ஆனால், ஹார்வார்ட் பல்கலைக்கழகம் அதிபர் ட்ரம்பின் கோரிக்கையைக்கு பணிய மறுத்துவிட்டது, பல்கலைக்கழகத்தை அரசு அதிகாரிகள் கண்காணிக்கும் முறையை ஏற்க முடியாது எனத் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் புகழ்பெற்ற பழமையானது ஹார்வார்ட் பல்கலைக்கழகம். தனியார் பல்கலைக்கழகமாக செயல்படும் ஹார்வார்ட் கல்வி நிறுவனத்தில் மெரிட்டில் மட்டுமே மாணவர் சேர்க்கை நடக்கிறது. உலகம் முழுவதும் இருந்து பல மாணவர்கள் பல்வேறு பிரிவுகளில் படித்து வருகிறார்கள்.
இதையும் படிங்க: அமெரிக்காவில் பணியாற்றும் இந்தியர்களுக்கு சிக்கல்..! ஆப்பிள், கூகுள், அமேசான் நிறுவன ஊழியர்களுக்கு எச்சரிக்கை..!

இந்நிலையில் ஹார்வார்ட் பல்கலைக்கழகத்துக்கு சமீபத்தில் கடிதம் அனுப்பிய அமெரிக்க அரசு “பல்கலைக்கழகத்தில் யூதர்களுக்கு எதிரான பிரச்சாரத்துக்கு தடை செய்ய வேண்டும், மாணவர்கள் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக எழுதுவது, பேசுவது, நிதி திரட்டுவது, கூட்டம் போடுவதை தடை செய்ய வேண்டும் உள்பட பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்து” எழுதப்பட்டிருந்தது.
இந்த கடிதத்தை ஏற்க மறுத்த ஹார்வார்ட் பல்கலைக்கழகம், “ஹார்வார்ட் பல்கலைக்கழம் தனியாருடையது. ஹார்வார்ட் பல்கலைக்கழகம் தனியார் பல்கலைக்கழகம். இங்கு பயிலும் மாணவர்கள் மெரிட்டில் தேர்ச்சி பெற்று பயில்கிறர்கள். மாணவர்கள் சேர்க்கை குறித்து தெளிவான விதிகளை வெளிப்படையாக அறிவித்து அதன்படி செயல்படுகிறோம்.

இங்கு பயிலும் மாணவர்கள், பணியாற்றும் பேராசிரியர்கள், ஊழியர்கள் அனைவருக்கும் மதர்சார்பற்ற தன்மையோடு இருக்கிறார்கள். மாணவர்கள் முகக்கவசம் அணியக்கூடாது, யூதர்களுக்கு எதிராக பிரசாரம் செய்தல், ஒன்றுகூடுதலில் ஈடுபடக்கூடாது, பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக பேசக்கூடாது, பல்கலைக்கழக கட்டிடங்களில் போராட்டம் செய்யும் மாணவர்களை சஸ்பெண்ட் செய்ய வேண்டும், மாணவர்கள் நிதி திரட்டுதல், குழுவாகச் சேர்தல், கிரிமினல் செயல்களை தூண்டுதல், சட்டவிரோத செயல்கள், வன்முறை ஆகியவற்றுக்கு தடை விதிக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் கோரினார்.
ஆனால், நாங்கள் இந்த கோரிக்கைக்கு ஏற்கவில்லை. இதனால் பல்கலைக்கழகத்துக்கான 230 கோடி டாலர் நிதியையும், 6 கோடி டாலர் ஒப்பந்தத்தையும் நிறுத்தி வைத்துள்ளது அதிபர் ட்ரம்ப் அரசு" எனத் தெரிவித்துள்ளது.

இதனிடையே அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்று தனது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்ட செய்தியில் “ஹார்வார்ட் பல்கலைக்கழகம் அரசுக்கு பணிந்து செல்ல வேண்டும். இல்லாவிட்டால் நிதியுதவியையும், ஒப்பந்தத்தையும் இழந்தது போல், வரிச்சலுகையையும் இழக்கநேரிடும். அதன்பின் ஹார்வார்ட் பல்கலைக்கழகம் அரசியல் கட்சியாக அங்கீகரித்து வரிவசூலிக்கப்படும்.
மாணவர்களைத் தேர்ந்தெடுப்பது மற்றும் பேராசிரியர்களுக்கான அதிகாரம் உட்பட, நிர்வாக நடைமுறையை மாற்ற வேண்டும். ஹார்வார்ட் பல்கலைக்கத்துக்கு வரிவிலக்கு அளிப்பது என்பது முழுமையாக பொதுநல நோக்கோடு செயல்படுவதாகும். ஹார்வார்ட் பல்கலைக்கழக நிர்வாகம் மன்னிப்புக் கோர வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.

நியூயார்க்கில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் இதுபோன்று மாணவர்கள் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தனர், யூதர்களுக்கு எதிராகப் போராடினர். இதையடுத்து, அந்த பல்கலைக்கழத்தில் மத்திய கிழக்கு துறையையே நீக்க அதிபர் ட்ரம்ப் அழுத்தம் கொடுத்தார். இல்லாவிட்டால் 40 கோடி டாலர் நிதியுதவியை இழக்க நேரிடும் என எச்சரித்ததால் அந்த பல்கலைக்கழகம் பணிந்தது.

அமெரிக்காவில் இதுவரை 12க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளை அமெரிக்க அரசு இதுபோன்று நிதியுதவியை நிறுத்திவிடுவோம் என மிரட்டி பணிய வைத்துள்ளது, மாணவர்கள் மற்றும் ஊழியர்களிடையே இன வேறுபாட்டை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன. சட்ட நிறுவனங்களையும் அமெரிக்க அரசு விட்டுவைக்கவில்லை. அமெரிக்க அரசுக்கு எதிரான விஷயங்களில் ஆதரவாக செயல்பட்டால் நிதியுதவியை நிறுத்திவிடுவோம் என எச்சரித்துள்ளது.
ஹார்வார்ட் பல்கலைக்கழக தலைவர் ஆலம் கார்பர் கூறுகையில் “ஹார்வார்ட் பல்கலைக்கழகம் சுயாட்சி கொண்டது. எங்களின் சுதந்திரத்தைப் பாதுகாக்கவும், அரசியலமைப்பு வழங்கிய உரிமைகளை பாதுக்காகவும் யாருடனும் பேசத் தயாராக இல்லை. ஹார்வார்ட் மட்டுமல்ல எந்த தனியார் பல்கலைக்கழகமும் அரசு மேற்பார்வையில் இயங்குவதை விரும்பாது” எனத் தெரிவித்தார்.

முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா கூறுகையில் “உலகின் உயர்ந்த கல்வி நிறுவனங்களுக்கு ஹார்வார்ட் பல்கலைக்கழகம் உதாரணம். கல்வி நிறுவனச் சுதந்திரத்தைப் பாதுகாக்க சட்டவிரோத மற்றும் கொடூரமான செயல்களை செய்ய மறுத்தது சரியானது. தங்களின் தனிஉரிமையைப் பாதுகாக்க நீதிமன்றத்தை நாடும் என நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ட்ரம்ப் எபெக்ட்..! அமெரிக்கா வரி விதிப்பால் இந்தியாவின் ஜிடிபி 0.3% குறையும்: பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கை..!