காஷ்மீர் தீவிரவாத தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சிந்து நதி நீரை நிறுத்துவதாக அறிவித்துள்ள இந்தியா, ஏவுகணை சோதனைகளை நிகழ்த்தி வருகிறது. இந்த நிலையில் சிந்து நதி நீரை நிறுத்தினால் இந்தியா போருக்கு தயாராக இருக்க வேண்டும் என பாகிஸ்தான் அமைச்சர் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளார்.

ஆயுத கிடங்கில் ஷஹீன், கோரி, கஸ்னாவி உள்ளிட்ட ஆயுதங்கள் தயார் நிலையில் உள்ளதாகவும், பாகிஸ்தானுக்கு சிந்து நதி நீரை நிறுத்தினால், இந்தியா போருக்கு தயாராக இருக்க வேண்டும் எனவும் பாகிஸ்தான் அமைச்சர் ஹனீப் அப்பாசி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 'இந்தியா-பாகிஸ்தானின் 1,500 ஆண்டு காலப் பகை... இப்போதே முடிச்சி விட்டுடுங்க... அவசரப்படுத்தும் டிரம்ப்..!

130 அணு ஆயுதங்களை இந்தியாவுக்காகவே வைத்துள்ளோம். எங்களிடம் எத்தனை ஆயுதங்கள் உள்ளன., எத்தனை ஏவுகணைகள் உள்ளன என்பதை நாங்கள் இதுவரை காட்டவில்லை என அவர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: அழும் இடத்திலிருந்தே கண்டிக்கப்பட்ட பாகிஸ்தான்... உலக நாடுகள் வைத்த செக்..!