அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்த புதிய அணுசக்தி திட்டத்தை கைவிட காலக்கெடு நெருங்கி வருவதால், ராணுவ பாதுகாப்பை வலுப்படுத்தி வருவதற்கான உறுதியை ஈரான் வெளிப்படுத்தியுள்ளது. ஈரானில் உருவாக்கப்பட்டுள்ள ஏவுகணை நகரத்தை அந்நாட்டில் ஈரான் புரட்சி பாதுகாப்புப் படை (ஐஆர்ஜிசி) உருவாக்கியுள்ளது. 85 வினாடிகள் வரை ஒளிபரக்கூடிய வீடியோவை ஈரான் அரசு ஊடகம் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் ஈரான் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் முகமது ஹூசைனின் பாஹேரி, ஐஆர்ஜிசி தலைவர் அமிர் அலி ஹாஜிஜெத்தா ஆகியோர் காரில் வருவது போன்று இருக்கிறது.

இந்த வீடியோவில் ஈரானின் தயாரிப்பான, அதிவலிமையான “கைபர் ஷெகான்”, “காதர் ஹெச் ஷெஜில்”, நிலத்திலிருந்து பாய்ந்து தாக்கும் ஏவுகணைகள் ஆகியவை அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. ஏவுகணைகள் பாதுகாக்கப்பட்டு வரும் இடம், சுரங்கப்பாதைகள், இரும்புக் கதவுகள் உள்ளிட்டவை உள்ளன. வெடிவிபத்து ஏற்பட்டால் இந்த இடத்திலிருந்து வெளியேறுவதற்கான சரியான பாதைகள் ஏதுமில்லை என்பதையும் வீடியோ தெரிவிக்கிறது.
இதையும் படிங்க: பட்டைய கிளப்பும் கோலி சோடா..! அமெரிக்க, வளைகுடா சந்தையில் இந்திய சோடாவுக்கு கடும் கிராக்கி..!

கடந்த 2020ம் ஆண்டு ஈரான் இதேபோன்ற வீடியோவை வெளியிட்டு, அதில் சுரங்கத்தில் வைக்கப்பட்டிருக்கும் ஏவுகணைகள், ராணுவத் தளவாடங்களை உலகிற்கு காண்பித்தது. அங்கு ஆயுதங்கள் தானியங்கி ரயில் மூலம் சுரங்கங்கள் வழியாக ஏவப்படுவதற்கு தயாராக இருந்தன. 3 ஆண்டுகளுக்குப் பிறகு, ஈரான் மற்றொரு போர் விமானங்களை தங்க வைக்கவும் பாதுகாக்கவும் உருவாக்கப்பட்ட சுரங்கம் குறித்த வீடியோவை வெளியிட்டது.
யுரேனியம் செறிவூட்டல் மற்றும் ஏவுகணை தொழில்நுட்பம் மேம்பாடு உள்ளிட்ட அணுசக்தி திட்டத்தை முற்றிலுமாக ஈரான் கைவிட வேண்டும் எனக் கோரி புதிய அணுசக்தி ஒப்பந்தத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கொண்டுவந்துள்ளார். இந்த புதிய அணு சக்தி ஒப்பந்தத்தில் ஈரான் கையொப்பமிட இரு மாத அவகாசம் அளித்துள்ளது அமெரிக்கா.

ஈரான் மீது அமெரிக்கா அழுத்தம் அதிகரித்து வரும் நிலையில் இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. ஈரான் ஒருவேளை அணு சக்தி ஒப்பந்தத்தை ஏற்க மறுத்தால் கடுமையான பொருளாதாரத் தடைகள் மற்றும் ராணுவ தாக்குதல் உட்பட கடும் விளைவுகளை அந்த நாடு சந்திக்க நேரிடும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.
ஆனால், அமெரிக்காவின் இந்த மிரட்டல்களை ஈரான் உறுதியாக நிராகரித்துள்ளது, தங்களின் அணுசக்தி இலக்கு, தேசத்தின் பாதுகாப்புக்கு முக்கியம், புவி அரசியலுக்கும் தேவை. எங்களின் ஏவுகணைகள், அணுகுண்டுகளை அழித்தால், வெளிநாடுகளில் இருந்து எங்களுக்கு பெரிய அச்சுறுத்தல்கள் வரலாம் என ஈரான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஈரான் தன்னுடைய ராணுவபலத்தை வெளிப்படுத்தும் விதத்தில் இந்த வீடியோ வெளியிட்டுள்ளது. இதற்கிடையே மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்கா இரு போர் விமானங்களை நிறுத்தியுள்ளது. தேவைப்பட்டால் எந்த நேரத்திலும் ராணுவ நடவடிக்கையை எடுக்கவும் அமெரிக்கா தயாராக இருக்கிறது. அதேசமயம், அமெரிக்காவிடம் இருந்து தொடர்ந்து ஆத்திரமூட்டும் செயல்கள் வந்தால், பதிலடி கொடுக்கவும் தயாராக இருக்கிறோம், நாங்கள் தொடர்ந்து ராணுவபலத்தை அதிகரிப்போம் எனத் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: இந்திய மாணவரை அமெரிக்காவிலிருந்து அனுப்பத் தடை.. ட்ரம்ப் அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு..!