டைட்டானிக், தி டெர்மினேட்டர் மற்றும் ஏலியன்ஸ் போன்ற படங்களை இயக்கியவர் பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் ஆவார். கனடா நாட்டில் பிறந்த அவர் தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார். இந்த நிலையில் அமெரிக்க புதிய அதிபராக டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறையாக பதவி ஏற்றது அவருக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. இதனால் அவர் அமெரிக்காவில் இருந்து வெளியேறி நியூசிலாந்து நாட்டில் வசிக்க திட்டமிட்டு இருக்கிறார்.

இதுகுறித்து நியூசிலாந்து நாட்டு ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் டிரம்ப் பற்றி பரபரப்பான கருத்துக்களை அவர் கூறியிருக்கிறார். அமெரிக்கா வை காலி செய்துவிட்டு நியூசிலாந்து நாட்டு குடியுரிமை பெற்று தலைநகர் வேலிங்டன் செல்ல இருப்பதாக இந்தப் பேட்டியில் அவர் கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க: இந்தியர்களை பாதிக்குமா..! அதிபர் ட்ரம்ப்பின் ‘கோல்டு கார்டு’ திட்டம் என்றால் என்ன?
ட்ரம்பிங் முகத்தை பார்க்க விரும்பாதது பற்றி ..'அருவருப்பா இருக்கு ..அந்த ஆளின் முகத்தை இனிமேல் நான் பார்க்க விரும்பவில்லை. அவரைப் பார்ப்பது ஒரு கார் விபத்தை மீண்டும் மீண்டும் பார்ப்பது போன்ற கொடூரமானது" என்று வெறுப்பின் உச்சத்திற்கே சென்றிருக்கிறார் கேமரூன்.
செய்தித்தாளின் முதல் பக்கத்தில் இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபர் பதவிக்கு போட்டியிட்டபோது படத்தில் இடம்பெற்று இருந்த டிரம்பின் முகத்தைப் பார்த்து இவ்வாறு அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
"அவர் மேலும் பேசும்போது நியூசிலாந்து ஊடகங்களில் ஏதோ ஒரு நல்ல விஷயம் இருக்கிறது. குறைந்தபட்சம் அவர்கள் மூன்றாவது பக்கத்தில் இதுபோன்ற படங்களை வைப்பார்கள்" என்றும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து.."நான் அந்த நபரின் முகத்தை இனிமேல் செய்தித்தாள்களின் முதல் பக்கத்தில் பார்க்க விரும்பவில்லை. அது மிகவும் அருவருப்பானது"என்றும் கூறி இருக்கிறார்.
டைட்டானிக் மற்றும் அவதார் போன்ற பிரபலமான படங்களில் இயக்குனரான இவர் 2012 முதல் நியூசிலாந்தில் பால்பண்ணை வீட்டில் வசித்தார். மீண்டும் நியூசிலாந்து செல்ல அவர் விரும்புகிறார்.
அது பற்றி குறிப்பிட்ட கேமரூன் "அமெரிக்கா வரலாற்று ரீதியாக அது எதற்காக இருக்கிறதோ அதற்காக நிற்கவில்லை என்றால் அது எதற்கும் நிற்காது ; இது வெறும் வெற்று யோசனையாக மாறிவிடுகிறது. மேலும் அவர்கள் தங்கள் சொந்த நலனுக்காக அதை விரைவாக வெளியேற்றுவதாக தான் நினைக்கிறேன்" என்று அவர் மேலும் கூறினார்.
டிரம்ப் மேல் எதற்காக இந்த வெறுப்பு என்பது குறித்து பேட்டியில் அவர் எதுவும் குறிப்பிடவில்லை.
இதையும் படிங்க: அமெரிக்காவின் முதல் தமிழ் கவர்னர்? அதிகாரப்பூர்வமாக அறிவித்த அதிபர் ட்ரம்ப்