அமெரிக்காவில் 35 ஆண்டுகளாக வழக்கத்தில் இருந்த, முதலீட்டாளர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு வந்த இபி-5(EB-5)விசாவை ரத்து செய்து புதிதாக “டிரம்ப் கோல்டு கார்டு விசா”வை அதிபர் ட்ரம்ப் அறிமுகம் செய்ய உள்ளார்.

அதாவது அமெரிக்காவில் குறைந்தபட்சம் 50 லட்சம் டாலர்கள்(இந்திய மதிப்பில் ரூ.44 கோடி) முதலீடு செய்யும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்,அவர்களின் முதலீட்டால் வேலைவாய்ப்பு உருவாக்கம் பெற்றால் அவர்களுக்கு “கோல்டு கார்டு விசா” வழங்கப்படும் என்று அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அதிபர் ட்ரம்பின் பரஸ்பர வரிவிதிப்பால் இந்தியாவின் ஏற்றுமதி பாதிக்கும்.. வேளாண் பொருட்களுக்கு அதிக வரி..!
வெள்ளை மாளிகையில் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஊடகங்களிடம் பேசியதாவது:
அமெரிக்காவில் குறைந்தபட்சம் 50 லட்சம் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்து,அதன் மூலம் வேலைவாய்பை உருவாக்கும் அந்நிய முதலீட்டாளர்களுக்கு கோல்டு கார்டு விசா வழங்கப்படும். இந்த நடைமுறை அடுத்த 2 வாரங்களில் தொடங்கும்.
எனக்குத் தெரிந்து ரஷ்யாவைச் சேர்ந்தவர்கள்தான் இந்த கோல்டு கார்டு விசாவுக்கு அதிகமாக தகுதி பெறுவார்கள். அவர்கள்தான் கோடீஸ்வரர்களாக இருக்கிறார்கள், வெற்றியாளர்ளாக இருக்கிறார்கள், அதிகமாகச் செலவிடுகிறார்கள், அதிகமாக வரியும் செலுத்துகிறார்கள். ஏராளமானோருக்கு வேலையும் தருகிறார்கள். எங்களுக்கு இந்தத் திட்டம் நிச்சயம் வெற்றிகரமாகும் என நினைக்கிறோம்” எனத் தெரிவித்தார்.

அமெரிக்க வர்த்தகத்துறை அமைச்சர் ஹோவார்ட் லுட்நிக் கூறுகையில் “ அதிபர் ட்ரம்ப் அறிவித்த கோல்டு கார்டு விசா என்பது கடந்த 1990களில் அறிமுகப்படுத்தப்பட்ட இபி-5 விசாவுக்கு மாற்றாக கொண்டுவரப்படும். அந்நிய முதலீட்டை அதிகப்படுத்த இபி-5 விசா கொண்டுவரப்பட்டது. அமெரிக்காவில் 10 லட்சம் டாலர் முதலீடு செய்து 10 பேருக்கு வேலைதரும் முதலீட்டாளர்களுக்கு இந்த விசா வழங்கப்படும் என அப்போது அறிமுகப்படுத்தப்பட்டது.
கோல்டு கார்டு விசா என்பது உண்மையில் க்ரீன் கார்டு போன்றதுதான், அமெரி்க்காவில் நிரந்தரமாக தங்குவதற்கான குடியுரிமைதான். இதன் மூலம் அமெரிக்காவில் குடியுரிமை தேவைப்படுவோர் முதலீடு செய்வார்கள், சட்டப்பூர்வமான குடியுரிமை பெறுவோர் எண்ணிக்கை அதிகரிக்கும், மோசடிகள் தடுக்கப்படும்.

2022, செப்டம்பர் 30ம் தேதி நிலவரப்படி 12 மாதத்தில் 8ஆயிரம் முதலீட்டாளர்கள் முதலீட்டாளர்கள் விசாவைப் பெற்றுள்ளனர். இபி-5 விசா வழங்கும் திட்டத்தில் ஏராளமான மோசடிகள் நடந்தன. உலகில் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் முதலீட்டாளர்களுக்கு விசாக்கள் வழங்கப்படுகின்றன. அதிலும் கோடீஸ்வர முதலீட்டாளர்களுக்கு கோல்டன் விசாக்கள் வழங்கப்படுகின்றன. அமெரிக்கா, பிரிட்டன், ஸ்பெயின், கிரீஸ், மால்டா, ஆஸ்திரேலியா, கனடா, இத்தலியில் இந்த விசாக்கள் வழங்கப்படுகின்றன.
இபி-5 விசாக்களை ரத்து செய்து, கோல்டன் விசாக்களை கொண்டுவருவதுதான் அதிபர் ட்ரம்பின் நோக்கம். ஒரு கோடி கோல்டு கார்டுகளை விற்பனை செய்ய அமெரிக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் அரசின் நிதிப்பற்றாக்குறை குறையும். அதிலும் கிரீன் கார்டு வழங்கும்போது, கோடீஸ்வர முதலீட்டாளர்கள், திறமையுள்ள பணியாளர்களை வேலைக்கு அமர்த்த நிறுவனங்களை முதலீடு செய்து அவர்களுக்கு குடியுரிமை பெற்றுத் தரலாம்” எனத் தெரிவித்தார்.

இந்தியர்களுக்கு பாதிப்பு வருமா?
அதிகமான முதலீட்டை ஈர்க்கும் வகையில்தான் கோல்டு கார்டு விசா அறிமுகப்படுத்தப்படுகிறது. இதனால் அமெரிக்காவில் பரவலாக சமத்துவமின்மை, குடியேற்றத்தில் ஏற்படும். இந்தியாவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் பலர் நீண்ட காலமாக EB-5 திட்டத்தில் விசா கிடைக்கும் என நம்பியுள்ளனர். ஆனால், அதிபர் ட்ரம்ப்பின் 50 லட்சம் டாலர் முதலீடு திட்டத்தில் கோல்டன் கார்டு விசாவால் அவர்கள் விசா பெறுவதில் சிக்கல் ஏற்படும். இந்த மாற்றம் ஏற்கனவே பல தசாப்தங்களாக கிரீன் கார்டு கேட்டு நிலுவையில் உள்ள திறமையான பணியாளர்களை மேலும் ஓரங்கட்டக்கூடும், குறிப்பாக இந்தியாவைச் சேர்ந்த பல மென்பொறியாளர்கள் க்ரீன் கார்டுக்காக விண்ணப்பித்து காத்திருக்கும்போது, இந்த திட்டம் அவர்களுக்கு மேலும் பின்டைவாகஅமையும் என்று விமர்சகர்கள் எச்சரிக்கின்றனர்.
இதையும் படிங்க: செயற்கை நுண்ணறிவுக்காக சிறப்புத் திட்டம்... பெண்களுக்காக ட்ரோன் திதி திட்டம்... நாடாளுமன்றக் கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரை...