போதை காளான் எல்லாம் பழைய மேட்டர் ,இப்போ டிரெண்டிங்கில் இருப்பது குதிரைதாலி
கொடைக்கானலில் இளைஞர்கள் சிலர் போதை வஸ்து போன்ற குதிரைதாலியை நுகர்ந்து தலைசுற்றுகின்றனர். சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோவை பார்த்து உடனடியாக நடவடிக்கை எடுக்க மக்கள் வலியுறுத்திவரும் நிலையில் அப்படி என்னதான் இருக்கு குதிரைதாலியில் பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் சர்வதேச சுற்றுலா தலமாக விளங்குகிறது. நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இயற்கை அழகை ரசிக்க வருவோருக்கு மத்தியில் இளைஞர்கள் சிலர் மேல்மலை கிராமங்களான பூண்டி, மன்னவனூர், கவுஞ்சிக்கு வாகனத்தை திருப்பி வருகின்றனர். எதற்கு என்று விசாரித்து பார்த்தால் குதிரைதாலியை நுகரும் விபரீத ஆசையில் அங்கு அவர்கள் செல்வது அம்பலமாகியுள்ளது.ஹார்ஸ்ராடிஷ் (Horseradish) எனப்படும் குதிரைதாலி என்பது, இஞ்சி போன்று தரைக்குள் விளையும் ஒருவகை கிழங்கு. இது மருத்துவ குணம் கொண்டது என்று கூறும் நபர் ஒருவர், வெளிமாநில இளைஞர்கள் மட்டுமின்றி வெளிநாட்டு கஸ்டமர்களையும் கவர்ந்து கல்லா கட்டி வருகிறார்.

உடனே அவர்களது மூளையில் மின்சாரம் பாய்ந்தது போன்று, கண்களிலும், மூக்கிலும் பல்ப் எரிகிறது. அத்துடன், தலையில் கை வைத்து பித்துப் பிடித்தவர்கள் போன்று ஆக்சன் செய்கிறார்கள். இதை, தங்களது இன்ஸ்டாகிராம் உட்பட சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு தற்போது வரலாகிவருகிறது கொடைக்கானல் மலைக்கு ஏறும் போது, பலருக்கும் காது அடைக்கும், தலை கனமாக மாறிவிடும். அப்படி வருவோர் ஒருமுறை குதிரைதாலியை இடித்து நுகர்ந்துவிட்டால், நார்மலாகி விடுவார்கள் என்று கூறுகிறார் குதிரைதாலியை இளைஞர்களுக்கு கொடுக்கும் ராஜ்.இதற்கு, இவ்வளவு வேண்டும் என்று கட்டணம் நிர்ணயிக்கவில்லை. இருந்த போதும் தனது மருந்தின் மகத்துவத்தை அறிந்து பலரும் ஆயிரக்கணக்கில் அள்ளிக் கொடுப்பதாக தெரிவித்துள்ளார். தனது மருந்தின் மகத்துவத்தை உள்ளூர்க்காரர்கள் கேலி செய்வதாக ஆதங்கம் கொள்கிறார்.அதுவே, வெளிமாநில இளைஞர்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தன்னை கொண்டாடுவதாக பெருமிதம் கொள்கிறார். குதிரைதாலி மருத்துவத்துக்கு இடையே மூலிகை காப்பியும் சேல்ஸ் செய்யப்படுகிறது. மூலிகை காப்பியை அருந்தும் போது உடம்பில் உள்ள கழிவுகள் வெளியேறுவதாக கூறும் ராஜ், அதற்கு 400 ரூபாய் வசூலிப்பதாக வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கொடைக்கானல் வரும் இளைஞர்கள் குதிரைதாலி நுகரும் கலாசாரம் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால், எந்தவொரு மருத்துவ ஆராய்ச்சிக்கும் உட்படுத்தாமல் இதை நுகர்ந்தால் பக்க விளைவு ஏற்பட்டு உயிருக்கே ஆபத்தாக முடியும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். எனவே, வைத்தியர் என்ற போர்வையில் அரசின் அங்கீகாரம் இன்றி செயல்படும் நபர்கள் கூறுவதை நம்பி, இளைஞர்கள் இது போன்று விபரீத முயற்சியில் ஈடுபடக் கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.கொடைக்கானல் மலைக்கிராமங்கள் ஏற்கனவே போதை காளான், கஞ்சா போன்ற போதை வஸ்துகள் புழக்கம் அதிகமாகியுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. இந்த சூழலில் போதை வஸ்து போன்று குதிரைதாலி நுகர்வதும் அதிகரித்துள்ளது. இளைஞர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, அரசு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை.
இதையும் படிங்க: புது வெள்ளை மழையில் கொடைக்கானல் ... உறைபனியை ரசிக்க குவியும் சுற்றுலாபயணிகள்..!